full screen background image

“தரமான படமாக வருகிறது அம்மணி..” – இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்கிறார்

“தரமான படமாக வருகிறது அம்மணி..” – இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்கிறார்

அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே  அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் படமாகிவிட்டது ‘அம்மணி’ திரைப்படம்.

அனைத்துப் பணிகளும் முடிவுற்ற  நிலையில் ‘அம்மணி’ திரைப்படம் திரைக்கு வரத் தயாராக உள்ளது. வித்தியாசமான கதைக் களம், நேர்த்தியான படப்பிடிப்பு என எல்லா அம்சங்களும் பொருந்திய ‘அம்மணி’  தயாரிப்பாளர் வெண் கோவிந்த் அவரகளுக்கு நல்ல பெயர் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்தக் கூற்றை நிரூபிப்பது போலவே இந்தப் படத்தின் மீது விநியோகஸ்தர்களின் வர்த்தக ரீதியான கவனமும்  விழ ஆரம்பித்து விட்டது.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், “அம்மணி’ என் வாழ்வில் மறக்க முடியாத படமாக இருக்கும். என்னுடைய இந்தக் கதையை கேட்ட உடனேயே இதனை படமாக்க முன் வந்த தயாரிப்பாளர் வெண் கோவிந்த் சாருக்கு நன்றி. அவருடைய ஒத்துழைப்பால்தான் படமும் குறிப்பிட்ட நேரத்தில், தரமான படமாக தயாராகியுள்ளது.
‘அம்மணி’  என் நெஞ்சில் ஆழமாக, பதிந்த கதை. இந்த படத்துக்கு பேராதரவு நல்கிய ஊடக நண்பர்களுக்கு மிக்க நன்றி..” என்றார். 
Our Score