தல அஜீத்குமாரின் 56-வது படத்திற்கு “வேதாளம்” என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி பூஜை போடப்பட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.
இந்தப் படத்தில் அஜீத்துடன் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், வித்யூ ராமன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். ‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு சரியான தலைப்பு கிடைக்கவில்லை என்று சொல்லி இதுநாள்வரையிலும் தலைப்பிடாமலேயே ‘தலயின் 56-வது படம்’ என்றே அழைத்து வந்தார்கள்.
இன்றைக்கு ஒரு வழியாக இந்த நள்ளிரவில் படத்தின் தலைப்பைச் சொல்லி மீடியாக்களை காப்பாற்றியிருக்கிறார்கள். நல்லது.
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ’56-வது படம்’ என்றே எழுதுவது..? இப்போதாவது சொன்னார்களே அதுவரைக்கும் நன்றிகள்..!