நலன் குமாரசாமி இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்..!

நலன் குமாரசாமி இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்..!

‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘வில்லா (பீட்சா 2)’, ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்த தயாரிப்பாளர் சி.வி.குமார் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.

இத்தயாரிப்பில் அவருடன் கை கோர்த்திருப்பவர் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கே.ஈ.ஞானவேல் ராஜா. மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் தயாராக உள்ள இப்படத்திற்கு ‘காதலும் கடந்து போகும்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், மடோனா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.  மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லியோஜான் பால் படத் தொகுப்பை மேற்கொள்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ‘சூது கவ்வும்’ வெற்றி படத்தின் இயக்குநரான நலன் குமாரசாமி இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

Our Score