full screen background image

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ‘அம்பு நாடு ஒம்பது குப்பம்’ படம்

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ‘அம்பு நாடு ஒம்பது குப்பம்’ படம்

பி.கே. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பூபதி கார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘அம்புநாடு ஒம்பது குப்பம்’.

இப்படத்தில் சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதாஸ்ரீ, விக்ரம், சுருதி, பிரபு மாணிக்கம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மூலக்கதை – துரை குணா, இயக்கம் – ஜி.ராஜாஜி, ஒளிப்பதிவு – ஓ.மகேஷ், இசை – அந்தோணி தாசன் – ஜேம்ஸ் வசந்தன், படத் தொகுப்பு – பன்னீர்செல்வம், நடன இயக்கம் – ராதிகா, பாடகர்கள் – பிரதீப்குமார் அந்தோணிதாசன், பத்திரிகை தொடர்பு – ஆறுமுகம்.

சமூக ஒடுக்குமுறை சம்பந்தப்பட்ட ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாகியுள்ளது.

புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை எழுத்தாளர் துரை குணா, இயக்குநர் ஜி.ராஜாஜி, தயாரிப்பாளர் பூபதி கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார். 

இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

Our Score