full screen background image

தோனி தயாரிக்கும் ‘எல்.ஜி.எம்.’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!

தோனி தயாரிக்கும் ‘எல்.ஜி.எம்.’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் ‘எல்.ஜி.எம்’.

இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இசையமைப்பாளரும், இயக்குநருமான ரமேஷ் தமிழ்மணி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். 

 

ஃபில் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி வரும் இப்படத்தின் தயாரிப்பாளரான விகாஸ் ஹசிஜா பேசுகையில், “எங்களது ‘எல்.ஜி.எம்.’ திரைப்படம் சிறப்பாக உருவாகி வருகிறது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் பின்னணி வேலைகளைத் தொடங்கவிருக்கிறோம். தமிழ் திரையுலகில் எங்களின் சிறப்பான பயணம் தொடங்கி இருக்கிறது. மேலும் இது நல்ல அனுபவங்களையும் வழங்கி இருக்கிறது…” என்றார்.

படத்தின் படைப்புத் திறன் நிர்வாக தலைவரான பிரியன்சு சோப்ரா பேசுகையில், “எங்களது இந்த ‘எல்.ஜி.எம்.’ திரைப்படம் புதுமையான உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் பல ஆச்சரியமளிக்கும் விசயங்கள் இடம் பெற்றிருக்கிறது. திறமை வாய்ந்த நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர்களின் முழுமையான பங்களிப்புடன் இந்தப் படைப்பு உருவாகி வருகிறது. நேர்த்தியாகவும், தோழமையுடனும் தயாராகி வரும் இதனை நாங்கள் மிகவும் ரசிக்கிறோம்…” என்றார்.

இந்த ‘எல்.ஜி.எம்’ என்னும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இதனை எம்.எஸ்.தோனி தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Our Score