full screen background image

உதயமானது அகில இந்திய சினிமா ஒளிப்பதிவாளர் கூட்டமைப்பு..!

உதயமானது அகில இந்திய சினிமா ஒளிப்பதிவாளர் கூட்டமைப்பு..!

பல்வேறு மாநில சினிமா ஒளிப்பதிவாளர்கள் சங்கங்கள் இணைந்து புதிதாக அகில இந்திய அளவிலான ஒளிப்பதிவாளர்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கான ஒருங்கிணைப்பு கூட்டம் பிப்ரவரி 23, 24 தேதிகளில் சென்னையில் நடந்துள்ளது.

IMG_7878

இதில் கேரளா ஒளிப்பதிவாளர்கள் சங்கம், ஆந்திரா ஒளிப்பதிவாளர்கள் சங்கம், கர்நாடகா ஒளிப்பதிவாளர்கள் சங்கம், வட இந்தியா ஒளிப்பதிவாளர்கள் சங்கம், சென்னையில் இருக்கும் தென் இந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் அகில இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தலைவராக மும்பையைச் சேர்ந்த அனில்மேத்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

செயலாளராக கேரளாவைச் சேர்ந்த சன்னி ஜோஸப்பும், தமிழகத்தைச் சேர்ந்த பெப்ஸி அமைப்பின் செயலாளர் ஜி.சிவாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பொருளாளராக ராபர்ட் ஆசீர்வாதம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, ஆந்திரா, கேரளா, கன்னடம், மும்பை மற்றும் கொல்கத்தா சங்கங்களிலிருந்து 12 பேர் கொண்டு குழுவும் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

IMG_7837

ஒளிப்பதிவாளர்கள் இந்தியாவில் உள்ள எந்த மொழி மாநிலத்தில் உறுப்பினராக இருந்தாலும், எந்த மாநில படங்களிலும் பணியாற்றலாம் என்கிற முடிவை இங்கே எடுத்திருக்கிறார்கள்.

அதே சமயத்தில், வெளிநாட்டு ஒளிப்பதிவாளர்கள் இந்தியா வந்து வேலையில் ஈடுபட்டால் அவர்களுக்கெதிராக அகில இந்திய ஒளிப்பதிவாளர் கூட்டமைப்பு தடை விதிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற தென் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர் சந்தோஷ் சிவனை இக்கூட்டத்தில் பாராட்டியுள்ளனர்.

IMG_1388

இந்தக் கூட்டத்தில் என்.கே.விஸ்வநாதன், ஜி.சிவா, பாபு, மது அம்பர், ஆர்.டி.ராஜசேகர், ரவிவர்மன், கே.எஸ்.செல்வராஜ், எம்.வி.பன்னீர்செல்வம், ரத்தினவேலு, எம்.எஸ்.பிரபு, ரகுநாதரெட்டி, நட்ராஜ், வேல்ராஜ், ரவீந்தர், பிரியன், ஓம்பிரகாஷ், கே.ராஜூ, பாபுசாய், சீனிவாசன், பி.எஸ்.செல்வம், செல்லத்துரை, மகேந்திரன் மற்றும் பல ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

Our Score