full screen background image

பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள்-DVD-யில்..!

பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள்-DVD-யில்..!

நேற்றைய முன் தினம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த கேமிரா கவிஞர், இயக்குநர் பாலு மகேந்திராவின் நினைவஞ்சலி கூட்டத்தில், பாலு மகேந்திராவின் சிறந்த பத்து படங்கள் (தமிழ், மலையாளம், கன்னடம்) அடங்கிய DVD தொகுப்பு வெளியிடப்பட்டது. ‘கோகிலா’, ‘அழியாத கோலங்கள்’, ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘யாத்ரா’, ‘வண்ண வண்ணப் பூக்கள்’, ‘சதி லீலாவதி’, ‘மூடுபனி’, ‘மூன்றாம் பிறை’, ‘மறுபடியும்’ ஆகிய படங்கள் இந்த தொகுப்பில் உள்ளன.

சிறந்த சினிமா ஆக்கம் பற்றிய விழிப்புணர்வுக்காக திரு.அருண் தலைமையில் நடந்து வரும் தமிழ் ஸ்டூடியோ.காம் என்ற அமைப்பு, மறைந்த கேமிரா கவிஞர் பாலு மகேந்திராவின் பெயரில் இந்த வருடம் முதல், ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளான மே 19 ஆம் தேதி, சிறந்த கலைஞர்களுக்கு இயக்குநர் பாலு மகேந்திராவின் பெயரில் விருது கொடுத்து கவுரப்படுத்த உள்ளது.

இந்த நிகழ்விற்கும், பரிசளிப்பிற்கும் தேவையான பணத்திற்காக இந்த பத்து வீடியோக்கள் அடங்கிய தொகுப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார் தயாரிப்பாளரும், யு டிவியின் தலைமைச் செயல் அலுவலருமான திரு.தனஞ்செயன். இந்த பத்துப் படங்கள் அடங்கிய தொகுப்பை நண்பர்களுக்கு கொடுத்து, இதில் கிடைக்கும் நன்கொடையை வைத்து அந்த பாலுமகேந்திரா விருது நிகழ்வை சிறப்பாக நடத்துங்கள் என்று ஆலோசனையும் கூறியுள்ளார்.

இயக்குநர் பாலு மகேந்திராவின் இந்த பத்துப் படங்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை என்ற பெயரில் கிடைக்காது. ஆனால், இதனை பெற விரும்பும் நண்பர்கள், தமிழ் ஸ்டூடியோ.காம் நடத்தும் இயக்குநர் பாலு மகேந்திராவின் விருது நிகழ்விற்கு நன்கொடையாக 1000 ரூபாய் கொடுத்து, DVD தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த அமைப்பின் நிறுவனர் அருண் தெரிவித்துள்ளார்.

DVD தொகுப்பு வேண்டுமெனில் 9578780400 என்ற எண்ணில் திரு.தினேஷ் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

Our Score