‘அரண்மனை’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு பின்பு இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 2’.
இந்தப் படத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு இசை ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி. அவினி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் குஷ்பூ சுந்தர் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்த ‘அரண்மனை 2’ படத்தின் கிளைமாக்ஸ் பாடல் காட்சிக்காக 103 அடி நீள பிரம்மாண்டமான அம்மன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டு அதன் முன் ஏராளமான நடன கலைஞர்கள் மற்றும் ஜூனியர் ஆர்டிஸ்ட்களை கொண்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த பாடலுக்காக உருவாக்கப்பட்டுள்ள அம்மன் சிலையானது ஆசியாவிலேயே மிக பெரிய அம்மன் சிலை என்றும். இதை போன்ற 103 அடி நீள அம்மன் சிலை வேறு எங்கும் கிடையாது என்று படக் குழுவினர் கூறினர்.
இந்த அம்மன் சிலை லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸ் என்னும் உலக சாதனை முயற்சிகள் இடம் பெறும் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரம்மாண்டமான அம்மன் சிலையை உருவாக்கியவர் கலை இயக்குநர் குருராஜ்.
இந்த சிலையை உருவாக்கிய கலை இயக்குநர் குருராஜ் இது பற்றி பேசும்போது, “அரண்மனை 2’ படத்தின் கிளைமாக்ஸ் பாடல் காட்சிக்கு பிரமாண்டமான அம்மா சிலை ஒன்று தேவை. ஆரம்பத்தில் அதை கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் உருவாக்கலாம் என்றுதான் யோசித்தோம். அதன் பின்னர் யோசித்தபோது சிலை உண்மையாக இருந்தால் தத்ரூபமாக இருக்குமே என்பதால் நிஜ அம்மன் சிலையை 103 அடி நீளத்தில் உருவாக்க முடிவு செய்து வேலையை ஆரம்பித்தோம்.
மிகப் பெரிய வேலைப்பாடுக்கு பின்பு நானும் என் குழுவினரும் இந்த சிலையை உருவாக்கி முடித்தோம். இந்த சிலை செய்து முடிக்க நாற்பது நாட்களுக்கு மேல் ஆனது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ், ஸ்கேலிடன் மற்றும் பல்வேறு விதமான பொருட்களை கொண்டு இந்த சிலையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
முறைப்படி அம்மன் சிலையை வடிவமைப்பவர்கள் அதை எப்படி உருவாக்குவார்களோ அதே போல் விரதம் இருந்து முறைப்படி இந்த 103 அடி அம்மன் சிலையை நானும் என் குழுவினரும் உருவாக்கினோம். இதைப் போன்ற அம்மன் சிலையை வேறு எங்குமே பார்க்க முடியாது. இந்த சிலை சிறப்பாக வர மோல்டர் மணி மற்றும் குழுவினரும் முக்கிய காரணம் என்றார்.
அந்த நடனக் காட்சியை அமைத்துக் கொடுத்த நடன இயக்குநர் ஷோபி மாஸ்டர் பேசும்போது, இந்த ‘அரண்மனை-2’ படத்துக்காக இந்த பிரம்மாண்டமான 103 அடி நீள அம்மன் சிலை முன்பு அம்மன் பாடலுக்கான நடனத்தை இயக்குவது எனக்கு மிகவும் வியப்பாகவும், புதுமையாகவும், சவாலாகவும் இருந்தது. இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநர் சுந்தர் சி அவர்களுக்கு நன்றி.
நான் இதுவரை எத்தனையோ பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளேன். அதில் கோவில் முன்பு, கோவில் திருவிழா போன்ற பாடல்களும் அடங்கும். ஆனால் இப்போதுதான் முதன்முறையாக முழுமையான ஒரு அம்மன் பாடலுக்கான நடனத்தை இயக்கவுள்ளேன்.
இயக்குநர் சுந்தர்.சி என்னிடம் அம்மன் பாடலுக்கு நடனம் அமைக்க வேண்டும். அதுவும் 103 அடி நீள மிக பிரம்மாண்டமான அம்மன் சிலைக்கு முன்பு பாடலை மிக பெரிய அளவில் படமாக்க வேண்டும் என்றதும் என்னுள் மிகப் பெரிய ஆர்வம் தொற்றிக் கொண்டது.
அதற்கு இணையாக எனக்கு மற்றுமொரு ஆர்வமும் எனக்கு இருந்தது, அது ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதியின் இசையில் அம்மன் பாடல் எப்படி வந்திருக்கும் என்ற ஆர்வம்தான். ‘ஹிப் ஹாப்’ மற்றும் பல்வேறு வித்தியாசமான பாடல்களுக்கு இசையமைக்கும் ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதியின் இசையில் உருவாகியிருக்கும் அம்மன் பாடலை கேட்க ஆர்வமாக இருந்தேன்.
பாடலை கேட்டவுடன் நிஜமாகவே அசந்துவிட்டேன். இந்த அம்மன் பாடல் சிறப்பாக வந்துள்ளது. இசையில் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார் இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி. இப்போது இங்கே அந்த பாடலுக்கு ஏராளமான நடன கலைஞர்களை கொண்டு பாடலுக்கு நான் நடனம் அமைத்து வருகிறேன். எனக்கு இது புதுமையான அனுபவமாக உள்ளது..” என்றார்.
ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார் பேசும்போது, இந்த ‘ஆரண்மனை-2’ படத்துக்காக பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 103 அடி நீள அம்மன் சிலையின் முன்பு படப்பிடிப்பு நடத்துவது எனக்கு புதுமையாக உள்ளது.
பல நாள் உழைப்பில் உருவான அம்மன் சிலையின் முன்பு பிரமாண்டமான முறையில் இயக்குநர் சுந்தர்.சி.யோடு நாங்கள் இந்த பாடலை உருவாக்கி வருகிறோம். கிளைமாக்ஸ் பாடல் காட்சியாக உருவாகி வரும் இந்த பாடல் நிச்சயம் பேசப்படும்.
Casting List :
Sundar.C, Sidharth, Trisha, Hansika, Poonam bajwa, Soori, Radharavi, Subhu panju, Manobala, Kovai sarala,
Rajkapoor & others…
Technician list :
Story, Screenplay, Direction : Sundar.C
Music : Hip hop Tamizha
Cinematography : U.K.Senthil kumar.
Editor : Srikanth .N.B
Dialogues : Venkatt Ragavan
Art director : Gururaj
Choreography : Brindha , Shobby
Fight master : Dhalapathi dinesh
Production executive : R.P.Balagopi.
Released by : Thenandal flims
P.R.O : Johnson