அஜீத்தின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது கெளதம் மேனன் என்றும் படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் 9-ம் தேதியன்று துவங்க இருக்கிறது என்றும் இன்றைக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆரம்பம்’ படத்தைத் தயாரித்த ஏ.எம்.ரத்னமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். ஆனால் தனது சொந்த பேனரில் இல்லை. ஸ்ரீசத்யசாய் மூவிஸ் என்கிற வேறு நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார். இது அஜீத்தின் 55-வது படம்.
இந்தப் படத்தில் அஜீத்திற்கு இரண்டு ஜோடிகள் என்று சொல்லப்படுகிறது. அது அனுஷ்கா மற்றும் எமி ஜாக்சன் என்று மரத்தடி ஜோசியம் சொல்லப்படுகிறது.
படத்திற்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜை அணுகியிருக்கிறார் கெளதம் மேனன். ஆனால் ஹாரீஸ் இன்னமும் யெஸ் என்றும் சொல்லவில்லை.. நோ என்றும் சொல்லவில்லையாம்.. ஸோ.. இது போன்ற தகவல்கள் எல்லாம் உறுதியானவுடன் உங்களுக்குத் தெரிவிப்பதாக இதே பத்திரிகை செய்தியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையேதான் நாமும் நமது வாசகர்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம். மேற்படி தகவல்களுக்காகக் கொஞ்சம் காத்திருக்கவும்..!