full screen background image

பரத்-நந்திதா நடிப்பில் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி..!

பரத்-நந்திதா நடிப்பில் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி..!

கலகலப்பான நகைச்சுவைப் படமாக உருவாகி வருகிறது ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி.’ இப்படம் பற்றிய தகவல் துளிகள்.

 தயாரிப்பு 

  ராஜம் புரொடக்ஷன்ஸ்

 நாயகன்

 ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணியாக டைட்டில் ரோல் ஏற்றிருப்பவர் பரத். இவருக்கு இது நிச்சயமாக வித்தியாசமான வேடமாக இருக்கும்.

 நாயகி

கவர்ச்சிப் பதுமையல்ல நடிக்கத் தெரிந்த நடிகை என்று நிரூபித்து வருபவர் அட்டகத்தி நந்திதா. அவர் இதில் நாயகியாகத் தோன்றி நல்ல நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

துணைப் பாத்திரங்கள்

நாயகன் பரத்தின் தந்தையாக ‘காதல்’ தண்டபாணி, அம்மாவாக ரேணுகா நடிக்கிறார்கள். நாயகி நந்திதாவின் தந்தையாக தம்பி ராமையா கலக்குகிறார். 

நகைச்சுவை நடிகர் பட்டாளம் 

நகைச்சுவைப் படமான இதில் வருகிற ஒவ்வொருவரும் சிரிக்க வைப்பார்கள். போதாக்குறைக்கு 18 நகைச்சுவை நடிகர்கள் நடித்து பட்டையைக் கிளப்புகிறார்கள்.

தம்பி ராமையா, மனோபாலா, சிங்கம்புலி, இமான் அண்ணாச்சி, சூது கவ்வும் கருணா, கோவை செந்தில், சிசர் மனோகர், கிரேன் மனோகர், சுருளி மனோகர், முத்துக்காளை, நான் கடவுள் ராஜேந்திரன், கிளி ராமச்சந்திரன், ஜூனியர் பாலையா, பட்டுக்கோட்டை சிவநாராயணமுர்த்தி போன்ற 18 பேர் நடித்துள்ளனர்.

இயக்குநர்

தன் படங்களில் நகைச்சுவை முலாம்பூசி படத்தையே நிறம் மாற்றிக் காட்டி வெற்றி பெற்றவர் பூபதிபாண்டியன். அவரிடம் ‘காதல் சொல்ல வந்தேன்’. முதல் ‘திருவிளையாடல் ஆரம்பம்’வரை உதவி இயக்கம், கதை விவாதம், வசன உதவி என்று பல வகையில் பங்கெடுத்தவர் எல்.ஜி.ரவிச்சந்தர். இவர் இப்போது முதல் படமாக இதை இயக்குகிறார்.

கதை

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்து, செல்வம் என்று எதுவும் சேர்த்து வைக்க வேண்டாம். நல்ல படிப்பைத் தேடிக் கொடுத்தால் போதும். அவர்கள் செல்வத்தை தேடிக் கொள்வார்கள். இக்கருத்தை வயிறு வலிக்கும் நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குநர் எல்.ஜி.ரவிச்சந்தர்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பாராட்டு

இப்பத்தின் கதையைக் கேட்ட இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். இப்படிக் கூட கதை பண்ணுவார்களா என்று சிரித்து ரசித்துப் பாராட்டியுள்ளார்.

படப்பிடிப்பு

கதை சேலம் மாவட்டத்தில் நடக்கிறது. சேலம், பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. 45 நாட்கள் திட்டமிடப்பட்டது. இதுவரை 25 நாட்கள் முடிந்துள்ளது. பாடல் காட்சிக்காக நெதர்லாந்து செல்ல இருக்கிறது படக் குழு.

ரஜினி, பிரகாஷ்ராஜை அடுத்து….!

ரஜினிகாந்த், பிராகாஷ்ராஜை அடுத்து பாலசந்தர் ஆசி பெற்ற கன்னட வரவாக அறிமுகம் ஆகிறார் கோமல் குமார்.  இந்த கோமல் குமார் தமிழில் வடிவேலு போல கன்டைத்தில் காமடி சூப்பர் ஸ்டார்.. கன்னட ‘சந்திரமுகி’யில் வடிவேலு பாத்திரத்தில் கலக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.கதை பிடித்துப் போய் ஒரு ரூபாய்கூட  சம்பளம் வாங்காமல் தன் சொந்த செலவில் பெங்களூரிலிருந்து வந்து நடித்துக் கொடுத்து இருக்கிறார்.

இசை

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்குப் பிறகு சைமன் இசையமைக்கும் படம் இது.  படத்தில் 4 பாடல்கள். யுகபாரதி 3 பாடல்களையும் கானாபாலா ஒரு பாடலையும் எழுதியுள்ளனர். காங்கோ பாடகர் ஒருவருடன் கானாபாலா இணைந்து பாடியுள்ளார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஒரு பாடலை பாடியுள்ளார் நடிகராக இசையமைப்பாளராக பரபரப்பான சூழலிலும் பாடிக் கொடுத்துள்ளார். 

தொழில் நுட்பக் கலைஞர்கள் 

ஒளிப்பதிவு – பி.ஜி. முத்தையா. (இவர் ‘பூ’  ‘கண்டேன் காதலை’, ‘சேட்டை’  போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர். ) 

பாடல்கள் – யுகபாரதி கானாபாலா

நடனம்– தினேஷ்– ஷோபி

 ஸ்டண்ட்- ஹரி. இவர் தளபதி தினேஷின் மகன்.

 கதை திரைக்கதை வசனம் இயக்கம் எல்.ஜி.ரவிச்சந்தர்

 தயாரிப்பு- புஷ்பா கந்தசாமி – எஸ்.மோகன்.

சித்த மருத்துவ பரம்பரைப் பின்னணியில் அருமையான நகைச்சுவைக் கதையாக உள்ளதை அறிந்தவர் பலரும் பாராட்டி வருகிறார்கள். சித்த மருத்துவம் பற்றி என்றதும் ஆண்மைக் குறைவு வைத்தியம் போன்ற மலிவானதாக கதை இருக்காது. ஆண்மைக் குறைவுக்கு மட்டுமல்ல அனைத்துக்கும் சித்த மருத்துவ தீர்வு உண்டு என்பதையும் உண்மையிலே சித்த மருத்துவம் சார்ந்து பல நல்ல செய்திகளையும் நகைச்சுவை இழையோட சொல்லியிருக்கிறார் ரவிச்சந்தர்.

இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்கு விரைவில் படக் குழு புறப்பட இருக்கிறது. ஜூனில் வெளியிடும் நோக்கில் படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

Our Score