full screen background image

‘பூஜை’ படத்துல ஸ்ருதிஹாசனுக்குத்தான் அதிக வேலையாம்..!

‘பூஜை’ படத்துல ஸ்ருதிஹாசனுக்குத்தான் அதிக வேலையாம்..!

விஷால்-ஸ்ருதிஹாசன் கூட்டணியில் ‘பூஜை’ படத்தை இயக்கி வரும் இயக்குநர் ஹரி என்றுமில்லாத அதிசயமாக ஷூட்டிங் ஆரம்பித்த முதல் நாளே படம் பற்றி பத்திரிகைகளுக்கு குறிப்பு எழுதி அனுப்பியிருக்கிறார்.

Poojai Day 2236683

“நாட்ல இப்ப இருக்கிற முக்கியமான ஒரு பிரச்சனையை எதிர்த்து ஹீரோ போராடுறான். அதை ஒரு குடும்ப பின்னணியோட அழுத்தமான காதலையும் சேர்த்து சொல்லப் போறோம். சேஸிங், ஆக்சனோட ஃபோர்ஸான காதலும் படத்துல இருக்கு. முக்கோணக் காதல் கதை மாதிரி, இது முக்கோண ஆக்சன் கதை. நம்ம படத்துல எல்லாமே கலந்துதானே இருக்கும். கோயம்புத்துர்ல ஆரம்பிக்கிற கதை பீகார்ல போய்தான் முடியும்.

Poojai Film Publicity235255

ஏழு வருஷத்துக்கு முன்னாடி விஷாலோட ‘தாமிரபரணி’ படம் பண்ணினேன். அது முழு நீள ஆக்சன் படம் கிடையாது. இந்த ஏழு வருஷத்தில் ஆக்சன், டான்ஸ் மட்டுமில்லாம ஒரு பெர்ஃபார்மராவும் விஷால் வளர்ந்திருக்கார். அதேமாதிரி ‘பூஜையும்’ நான் ஏற்கனவே பண்ண படங்களோட ஒப்பிட்டா அதுகளைவிடவும் பெட்டர் வெர்ஷனா இருக்கும். இப்படி எங்க ரெண்டு பேருக்கும் அடுத்த லெவல் பாய்ச்சலா இந்தப் படம் இருக்கும்.

Poojai Film Publicity235727

“கதை நடக்கிறது கோயம்புத்தூர்ல. அங்கே இதைவிடப் பிரமாதமான காஸ்ட்யூம்ஸ் கிடைக்குமே. படத்துக்கு ரொம்ப மாடர்னான ஒரு பொண்ணு தேவைப்பட்டாங்க. அந்த மாடர்ன் லுக், புரொஃபஷனல் டச் எல்லாமே ஸ்ருதிக்கு கரெக்ட் மேட்ச். என் படங்கள்ல இருந்து விலகி ரொம்ப மாடர்னா ஒரு லவ் போர்ஷன் வெச்சிருக்கோம். ஆரம்பத்தில் இருந்து க்ளைமாக்ஸ்வரைக்கும் ஸ்ருதிக்கு படத்துல வேலை இருந்துட்டே இருக்கும்..” என்று சொல்லியிருக்கிறார் ஹரி.

இப்படி எல்லா வேலையையும் ஸ்ருதியே செஞ்சுட்டா, ஹீரோ விஷாலுக்கு படத்துல என்னதான் வேலை..?

Our Score