இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் 1988-ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தை தமிழ்த் திரை ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பே இல்லை.
இப்போது இதே ‘அக்னி நட்சத்திரம்’ என்கிற பெயரில் முற்றிலும் புதிய கதைக் களத்துடன், ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக ஒரு திரைப்படம் உருவாகிறது.
இந்தப் படத்தை கரிஷ்மடிக் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மணிகண்டன் சிவதாஸூம், ஜேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் உதயாவும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தில் நடிகர்கள் உதயாகவும், விதார்த்தும் நாயகர்களாக நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – எல்.கே.விஜய், சண்டை இயக்கம் – சில்வா மாஸ்டர், இசை – ஒய்.ஆர்.பிரசாத், பாடல்கள் – பா.விஜய், படத் தொகுப்பு – சான் லோகேஷ், நடன இயக்கம் – தீனா, கலை இயக்கம் – ஷிவ் யாதவ், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
இயக்குநர்கள் நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்த்தன், மோகன் ராஜா ஆகியோரிடம் பல வெற்றிப் படங்களில் இணை – துணை இயக்குநராகப் பணியாற்றிய சரண் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இந்தத் துவக்க விழாவில் தயாரிப்பாளர்கள் மணிகண்டன் சிவதாஸ், உதயா, நடிகர் விதார்த், நாயகி, இயக்குநர் சரண், ஒளிப்பதிவாளர் எல்.கே.விஜய் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இத்திரைப்படம் சென்னை மட்டுமல்லாது ஏலகிரி, வேலூர் மற்றும் கோவையிலும் படமாக்கப்பட உள்ளது.











