மூத்த இயக்குநர் திரு.கே.பாக்யராஜின் உதவியாளரான ரஞ்சித் மணிகண்டன் இயக்கும் காதல் கலந்த காமெடி படம் ‘அதிமேதாவிகள்.’
வாழ்கையில் நிறைய மேதாவித்தனமான ஆட்களை நாம் சந்திப்பதுண்டு. அதில் இரண்டு அதிமேதாவிகளின் காதல் கதைதான் இந்த ‘அதிமேதாவிகள்’ திரைப்படம்.
ஒவ்வொரு கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையிலும் இப்படியான சம்பவங்கள் நடப்பதுண்டு. இந்தக் காதலர்களின் வாழ்கையில் நடந்ததும் சுவாரசியமான சம்பவங்கள்தான். இதை காமெடி கலந்து கதையாக உருவாக்கியுள்ளேன் என்கிறார் டைரக்டர் ரஞ்சித் மணிகண்டன்.
இவர் பாக்யராஜிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். மேலும் பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ள அனுபவத்தில் இப்படத்தின் மூலம் இயக்குயனராக அறிமுகம் ஆகிறார். கதை, திரைக்கதையையும் அவரே அமைக்கிறார். கல்லூரி வினோ வசனம் எழுதுகிறார். ‘சலீம்’ பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, சிவராஜ் கலை அமைக்க, பெர்லி சிங் தயாரிக்கிறார்.
2013-2014 ம் ஆண்டுக்கான சிறந்த எண்டர்டெயின்ட்மென்ட் ஏஜென்சி பட்டம் பெற்ற அப்சலுட் என்ற கம்பனி, முதன் முதலாக அப்சலுட் பிக்சர்ஸ் சார்பில் இப்படம் மூலம் பட தயாரிப்பில் களம் இறங்குகிறது.
இரண்டு அதி மேதாவிகளாக, சன் மியூசிக் வீடியோ ஜாக்கியான சுரேஷ் ரவி(அறிமுகம்), இஷாரா நாயர் நடிக்கிறார்கள். மேலும் கலாபவன் மணி, லிவிங்ஸ்டன், தம்பி ராமையா, ரேணுகா, ஜெகன், மனோபாலா மற்றும் பலர் நடிக்கின்றனர்…
இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் ஆரம்பமாகிறது. தொடர்ந்து சென்னையிலும், கேரளாவிலும் படமாக்கப்படுகிறது.