full screen background image

‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படம் துவங்கியது..!

‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படம் துவங்கியது..!

லட்சுமி திரைக்கலைக் கூடம் சார்பில் ஸ்தபதி டாக்டர் ஆர்.பிரபாகரின் தயாரிப்பில் எஸ்.ஜே.அலெக்ஸ் பாண்டியன் இயக்குந‌ராக அறிமுகமாகும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது.

‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிய கௌஷிக் ராம் கதாநாயகனாகவும், பிரபல யூ டியூபர்களான ரவி விஜே மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கும் இப்படத்தில் சிங்கம் புலி, குக் வித் கோமாளி புகழ் சில்மிஷம் சிவா, அஜித் யுனிக், டி.எஸ்.ஆர். உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

திருமதி துர்கா தேவி பாண்டியன் இணைத் தயாரிப்பாளராக உள்ளார். பிரஹத் முனியசாமியின் ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பு மேற்பார்வையாளராக நமஸ்காரம் சரவணன் பணியாற்றுகிறார். கலை இயக்குந‌ர் நந்தகுமார் ஆவார். நிர்வாக தயாரிப்பாளர் பொறுப்பை பாண்டியன் கவனிக்கிறார். படத் தொகுப்பை குணா கவனிக்க, ஹரி எஸ்.ஆர். இசை அமைக்கிறார். பத்திரிகை தொடர்பு பணிகளை நிகில் முருகன் மேற்கொள்கிறார்.

‘பவுடர்’ படத்தின் இயக்குந‌ர் விஜய் ஸ்ரீஜியிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய எஸ்.ஜே.அலெக்ஸ் பாண்டியன் இந்தப் படத்தின் மூலம் இயக்குந‌ராக அறிமுகம் ஆகிறார்.

இத்திரைப்படம் குறித்து அறிமுக இயக்குந‌ரான எஸ்.ஜே.அலெக்ஸ் பாண்டியன் பேசும்போது, “இது ரொமான்டிக் காமெடியாக, எதிர்பாராத பல திருப்பங்கள் நிறைந்த, உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். கிராமத்திலிருந்து கல்லூரி படிப்பிற்காக நகரத்திற்கு வரும் கதாநாயகன் சந்திக்கும் பிரச்சனைகளே படத்தின் முக்கிய கருவாக உள்ளது. அழுத்தமான சமூக கருத்துக்களை நகைச்சுவையுடன் கூறக் கூடிய படமாக இது இருக்கும்..” என்றார்.

இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் என்றும் சேது படத்திற்கு பின் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் எடுக்கப்படும் படம் இதுதான் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Our Score