விஷாலுடன் முதல்முறையாக ஜோடி போடும் தமன்னா..!

விஷாலுடன் முதல்முறையாக ஜோடி போடும் தமன்னா..!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம்  ‘கத்தி சண்டை.’

வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு, சம்பத் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை காமெடி, கமர்ஷியல் படமாக சுராஜ் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் மிக முக்கியமான நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். வடிவேலு தனி கதாநாயகனாக நடிக்கத் துவங்கிய பின்பு வேறொரு ஹீரோவுடன் இணைந்து நடித்ததே இல்லை. மற்றவர்களின் படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து வந்தவர், இப்போது மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில்தான் ஹீரோவுக்கு துணையாக காமெடியன் வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் மூலம் விஷால், வடிவேலு, சுராஜ் மூவரும் கூட்டணி சேர்கிறார்கள். விஷால், வடிவேலு இருவரும் ஏற்கனவே ‘திமிரு’ படத்தில் இணைந்து நடித்து அந்தப் படம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இயக்குனர் சுராஜ், வடிவேலு கூட்டணியில் ‘தலைநகரம்’, ‘மருதமலை’ இரண்டு படங்களுமே அமோக வெற்றி பெற்றுள்ளது.

படத்தின் ஹீரோயின் யார் என்கிற பேச்சு கோடம்பாக்கம் முழுவதுமே பரவலாகப் பேசப்பட்டு வந்த்து. இப்போது ஹீரோயினை கண்டுபிடித்துவிட்டார்களாம். நடிகை தமன்னாதான் முதல் முறையாக விஷாலுடன் இந்தப் படத்தில் ஜோடி சேர்கிறாராம்.

படத்தின் படிப்பிடிப்பு வரும் மே  2-ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.  

Our Score