full screen background image

‘பிரேமம்’ நடிகர் நிவின் பாலி மீது பாலியல் புகார் – போலீஸ் வழக்குப் பதிவு!

‘பிரேமம்’ நடிகர் நிவின் பாலி மீது பாலியல் புகார் – போலீஸ் வழக்குப் பதிவு!

கேரள திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி வரும் நிலையில், ‘பிரேமம்’ பட புகழ் நிவின் பாலி மீதும் ஒரு நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நேரியமங்கம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் அத்துமீறல் புகாரின் பேரில் நடிகர் நிவின் பாலி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
மலையாள திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகக் கூறி, நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் நடிகர் நிவின் பாலி மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமினில் வெளிவர முடியாதபடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இந்த வழக்கில் 6 பேரை குற்றவாளிகளாக சேர்த்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நிவின் பாலி 6-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை நிவின்பாலி மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு செய்தியில், “நான் ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஒரு தவறான செய்தி உலா வருவதை அறிந்தேன். அந்தச் செய்தி முற்றிலும் தவறு. இந்த விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை அனைத்துவித ஆதாரங்களுடன் நிரூபிப்பேன். என்னைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி. அடுத்து நடப்பதை சட்டம் பார்த்துக் கொள்ளும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

மலையாளத் திரையுலகில் ஜென்டில்மேன் நடிகர் என்று படவுலகத்தினரால் கருதப்பட்ட நிவின் பாலியே கடைசியில் இந்த பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டில் சிக்கியதை அடுத்து மலையாளத் திரையுலகமே திகைத்துப் போய் நிற்கிறது.

Our Score