full screen background image

கற்பழிக்கும் ஆண்களுக்கு ‘கட்’ செய்வதுதான் உரிய தண்டனை..” – நடிகை ஷகீலாவின் ஆவேச பேச்சு..!

கற்பழிக்கும் ஆண்களுக்கு ‘கட்’ செய்வதுதான் உரிய தண்டனை..” – நடிகை ஷகீலாவின் ஆவேச பேச்சு..!

தீபாவளியையொட்டி சன் மியூஸிக் சேனலுக்கு நடிகை ஷகீலா அளித்த சிறப்புப் பேட்டி இன்று காலை 9 மணிக்கு ஒளிபரப்பானது.

அந்தப் பேட்டியில் தனது திரையுலக வாழ்க்கை, சொந்த வாழ்க்கை, குடும்பத்தினர் என்று பல விஷயங்களையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார் ஷகீலா.

“நான் 10-வகுப்பில் பெயிலானபோது எங்கப்பா என்னை அடிச்சாரு. அப்போ எதிர்வீட்ல இருந்த மேக்கப்மேன் உமாசங்கர்தான் வந்து தடுத்தார். அவர்தான் அப்பாகிட்ட என்னைக் காட்டி ‘பாப்பாவை பேசாம சினிமால நடிக்க வைங்களேன்’னு சொன்னார். அப்போ இருந்த எங்க குடும்ப சூழ்நிலைல யாராச்சும் ஒருத்தர் சம்பாதிச்சுத்தான் ஆக வேண்டியிருந்தது.. அதுனால அப்பா, அம்மா சொல்றாங்களேன்னுதான் குடும்பத்தின் கஷ்டத்துக்காக நடிக்க வந்தேன்.

மறுநாளே என்னை ஸ்டூடியோவுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. ப்ளே கேர்ள்ஸ் என்ற படம். அந்தப் படத்துக்கு ஆர்ட்டிஸ்ட் செலக்சன் பண்ணிட்டிருந்தாங்க. என்னைப் பார்த்தவுடனே டைரக்டர் ஓகே சொல்லிட்டார். இப்படித்தான் நான் சினிமாவுக்குள்ள வந்தேன்.

சினிமால அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணினாத்தான் வாய்ப்பு கிடைக்கும்ன்றதை நானும் கேள்விப்பட்டிருக்கேன். பார்த்திருக்கேன். பட்.. எனக்கு அந்த மாதிரியெல்லாம் சூழல் அமையலை.. 

ஆனா என்கூட நடிச்ச பொண்ணுகள்லாம் ‘அவங்க என்னை கூப்பிடுறாங்க’ன்னு செட்ல சொல்வாங்க.. மறுநாள் காலைல வந்து அழுதுகிட்டே போயிட்டு வந்ததை சொல்வாங்க. அவங்க கூப்பிட்டுத்தான் இவங்க போனாங்களான்னு நானும் நம்ப முடியாது.. ஒவ்வொருத்தர் சூழ்நிலை அப்படி..!

முதல் சில படங்கள்ல நடிக்கும்போது எனக்கு எதுவும் தெரியலை.. அப்போ எனக்கும் சின்ன வயதுதான். அதையெல்லாம் உணர்ந்துக்குற அளவுக்கு எனக்கும் அறிவில்லை. அதுனால நிறைய தவறான பெயரும், படங்களும் எனக்குக் கிடைச்சு ஷகீலான்னாலே இப்படித்தான் அப்படீன்னு ஒரு பெயர் வந்திருச்சு.

‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்துல நடிச்ச சோனியாவும் நான் படிச்ச ஸ்கூல்லதான் படிச்சாங்க. வடசென்னைல இருக்கு. சோனியா எனக்கு சீனியர். அப்போ எங்க ஸ்கூல்லயே ஷூட்டிங்கெல்லாம் நடந்திருக்கு. அதுல அவங்க நடிச்சாங்க.

அந்தச் சமயத்துல அவங்ககிட்ட யூனிட்காரங்க பேசின பேச்சு.. பழகுனவிதம் இதையெல்லாம் பார்த்தப்போ சினிமா மேல எனக்கும் ஒரு பிரமிப்பு இருந்துச்சு.. ஒருவேளை நாமளும் சினிமால இருந்தா நம்மளையும் இப்படித்தான் ட்ரீட் பண்ணுவாங்களோன்னு நினைச்சேன். நான் சினிமாவை ஒத்துக்கிட்டதுக்கு இதுவும் ஒரு காரணம்..!

‘கிண்ணாரத் தும்பிகள்’ படத்துக்கு முன்னாடி சில காலம் நான் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு வீட்ல இருந்தேன். எனக்குப் பிடிக்கலைன்னு அம்மாகிட்ட சொல்லிட்டேன். ஆனா அம்மாவோ ‘இப்படியே சும்மா உக்காந்திருந்தா காசு எங்கேயிருந்து வரும்..? எப்படி நாமெள்லாம் சாப்பிடுறது?’ன்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. எனக்கு எரிச்சல்னா எரிச்சல். ‘அப்போ என்னைப் பத்தி உனக்குக் கவலையில்லை. நான் சம்பாதிக்கிற காசுதான் உனக்கு வேணும் அவ்ளோதான..?’ என்று சண்டை போட்டேன்.

ஆனாலும் அம்மாவோட கண்ணீர் என்னை அன்னிக்கு மாத்திருச்சு.. இறங்கிப் போய்க்கிட்டிருந்த தயாரிப்பாளர்களை திரும்பவும் மேல கூப்பிட்டு பேசி அதுல நடிக்க ஒத்துக்கிட்டேன். அதுல கதை என்னன்னா 35 வயசு பொண்ணு 17 வயசு பையனோட தொடர்பு வைச்சுக்குறாங்க. கதையைக் கேட்டப்போ எனக்கு கோபம் வந்திருச்சு. அப்போ என்னோட வயசு 25-தான். ‘இந்தக் கேரக்டருக்கு எப்படி என்னை கூப்பிட வந்தீங்க?’ன்னு சண்டை போட்டேன். ‘இல்ல உங்களை பார்த்தா அந்த ஏஜ்ல இருக்குற லேடி மாதிரி தெரியுது. அதுனாலதான் வந்தோம்’ன்னு சொன்னாங்க. கடைசில என்னோட குடும்பத்தின் நலனுக்காக திரும்பவும் அதே மாதிரி படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன்.

அந்தப் படத்துல எனக்கு பெரிய காஸ்ட்யூம்லெல்லாம் இல்லை. வெறும் ஜாக்கெட், வேஷ்டி, மேல துண்டு போர்த்தியிருப்பேன். இப்படித்தான் கிளாமர் காட்டியிருந்தேன். அதுவொண்ணும் பெரிய கிளாமர்ன்னும் சொல்ல முடியாது.

என்னோட எல்லா படத்துலேயும் இதே மாதிரியான கேரக்டர்கள்தான் தொடர்ச்சியாக கிடைச்சது. வரிசையா 25 படங்கள் இதே மாதிரி ராத்திரி பகலா உழைச்சு நடிச்சு சம்பாதிச்சேன். அதுலேயும் ஒரே நாள்ல 3 ஷிப்ட்டெல்லாம் நடிச்சிருக்கேன். இந்த மாதிரி படங்கள் தியேட்டர்கள்ல எப்படி ஓடுச்சுன்னு எனக்கும் மொதல்ல ஆச்சரியமாத்தான் இருந்தது. ஆனால் அதுக்கப்புறம் விசாரிக்கும்போது பிட்டு சீன்களையும் கூட காண்பிச்சே படத்தை ஓட்ட வைக்குறாங்கன்னு கேள்விப்பட்டு ரொம்ப மனசு கஷ்டமாயிருச்சு.

நான் பிட்டு படமால்லாம் தனியா எதுலேயும் நடிக்கலை. காட்சிப்படி எனக்கு எப்படியும் பெட்ரூம் சீன்தான் கொடுப்பாங்கன்னு தெரியும். அப்படித்தான் ஒரு படத்துக்கு எப்படியும் எனக்கு 3 பெட்ரூம் சீனாவது இருக்கும். என்கூட எனக்கு சிஸ்டர்ஸா நடிச்சவங்களை டாப்லெஸ்ஸா நடிக்க வைச்சு அந்த சீனை வைச்சுத்தான் என் படங்களை ஓட வைச்சிருக்காங்கன்னு கடைசியாத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்..

மொதல்ல என்கூட துணைக்கு என்னோட அப்பா வந்துக்கிட்டிருந்தார். அவர் ஒரு நாள் வராத நாள்ல ஒரு படத்துல என்னை டாப்லெஸ்ஸா நடிக்கச் சொன்னாங்க. நான் முடியாதுன்னு சொன்னேன். ‘உங்க அப்பாகிட்ட பேசிட்டோம். அவரும் ஓகேன்னுட்டாரு.. நீ நடிம்மா’ன்னு கம்பெல் பண்ணாங்க. அதுனால அந்த ஒரு நாள்ல மட்டும் நடிச்சேன். ஆனால் அடுத்த நாள் அப்பா என்கூட வந்துட்டாரு. அதுக்கப்புறம் யாரும் அந்த மாதிரி சீன்ல நடிக்கச் சொல்ல்லை. நல்லவேளையா அந்த டாப்லெஸ் சீன்கூட படத்துல இல்லை. தப்பிச்சேன்.. இப்பவும் யூடியூப்ல என் பேரை போட்டா வீடியோவா வந்து குவியுது. நான் பார்க்க மாட்டனே..!

இந்த மாதிரி சீன்களையெடுக்கும்போது அந்த ரூமுக்குள்ள கேமிராமேன், டைரக்டர், யூனிட் ஆட்கள்ன்னு நிறைய பேர் இருப்பாங்க. அந்த நேரத்துல நமக்கெப்படி லவ் மூடெல்லாம் வரும்..? அது சாதாரண நடிப்புதான். ஆனால் கொஞ்சம் இன்வால்வ்மெண்ட்டோடதான் நடிப்பேன். அப்பத்தான் நல்லாயிருக்கும். என்ன இருந்தாலும் நான் நடிகைதானே.?

என்கிட்ட இதுவரைக்கும் யாரும் வந்து ‘ஐ லவ் யூ’ சொன்னதில்லை. ஆனால் நான்தான் ஒரு சிலர்கிட்ட இதைச் சொல்லியிருக்கேன். ஆனால் எல்லாமே பெயிலியராயிருச்சு.

சென்சார் போர்டுன்னு ஒண்ணு இருக்கா இல்லையான்னெல்லாம் அப்போ தெரியலை. இருந்திருந்தால் நான் நடிச்ச படமெல்லாம் கண்டிப்பா வெளில வந்திருக்காது. அப்போ அந்த அளவுக்குத்தான் சென்சார் இருந்திருக்குன்னு நினைக்கிறேன்.

என்னோட ரசிகர்கள்.. ரசிகர் மன்றம்ன்னுல்லாம் நான் அப்பவே பெரிசா எடுத்துக்கலை. ஒரேயொருத்தர் மட்டும் எனக்கு விடாமல் கடிதமும், நான் நடிச்ச படங்களோட ஸ்டில்ஸையும் அனுப்பிக்கிட்டேயிருந்தார். அவரை மறக்க முடியாது..!

குடும்பக் கஷ்டத்துக்காக.. என் கூடப் பொறந்தவங்க நல்லதுக்காக என்னை வருத்திக்கிட்டு நான் ராப்பகலா கஷ்டப்பட்டு நடிச்சு உழைச்சு சம்பாதிச்ச மொத்தப் பணத்தையும் இழந்திட்டு இன்னிக்கு தனியா இருக்கேன். இதுதான் என் மனசை ரொம்ப கஷ்டப்படுத்துது. என்னோட அக்கா புள்ளைகள்லாம் நல்லா படிச்சு நல்லாயிருக்காங்க. ஆனால் இப்போ அவங்க யாருமே என்கூட அட்டாச்சுல இல்லை.

என் தம்பியும் என்னை மாதிரியே படிக்காம போயிட்டான். என் தங்கச்சி ஷீத்தல் ஒரு நாள் என்கூட ஷூட்டிங் பார்க்க வந்தா. வந்த இடத்துல அவளும் அழகா இருக்கான்னு சொல்லி கட்டாயப்படுத்தி அவளையும் நடிக்க வைச்சுட்டாங்க.

இப்போ 10 வருஷமா என்கூட நான் தத்தெடுத்த திருநங்கை மகள் இருக்கா. நல்லது, கெட்டது எல்லாத்தையும் அவகிட்டேயிருந்துதான் நான் இப்போ கத்துக்கிட்டிருக்கேன்.. இந்தச் சமூகத்துல ஷகீலாவுக்கு நல்ல பெயரோ, கெட்ட பெயரோ நான் எதையும் எதிர்பார்க்கலை. நான் என்னோட குடும்பக் கஷ்டத்துக்காக நடிக்க வந்தேன். சம்பாதிச்சேன்.. குடும்பத்தைக் காப்பாத்தினேன். அவ்ளோதான்.

நான் அப்படி.. இப்படின்னு சொல்றவங்கள்லாம் அவங்கவங்க கணவர்கிட்ட என்னை ரசித்த்தேயில்லையான்னு கேக்கச் சொல்லுங்க.. அப்போ தெரியும் எது உண்மைன்னு..?” என்று நீண்ட விளக்கமாக தனது வாழ்க்கை சரிதத்தை ஒளிவு மறைவில்லாமல் பேசினார் ஷகீலா.

கடைசியாக “கற்பழிப்பில் ஈடுபடும் ஆண்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு நினைக்குறீங்க..?” என்ற கேள்விக்கு ஷகீலா கொடுத்த பதில்தான் நிகழ்ச்சியின் ஹைலைட்.

“வேற ஒண்ணும் செய்யக் கூடாது. அவங்களோட ஆணுறுப்பை கட் பண்ணிரணும். அது ஒண்ணு இருக்கிறதாலதான அவங்க இத்தனை ஆட்டமும் ஆடுறாங்க.. இல்லைன்னா என்ன செய்வாங்க..? ஒருத்தருக்கு இந்த மாதிரி செஞ்சா போதும்.. நிச்சயம் திருந்திருவாங்க.. கற்பழிப்புகளே நடக்காது..” என்றார் ஆவேசமாக..!

ஆத்தாடி.. ஒரு பூவுக்குள் எப்பேர்ப்பட்ட பூகம்பம் இருக்கு..?!

Our Score