ஸ்டூடியோ 9 நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுரேஷுடனான தனது பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தை வாங்கி வெளியிட்ட ஸ்டூடியோ 9 அதிபர் சுரேஷ் அப்போதே விஜய் சேதுபதிக்கு 10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து ‘வசந்தகுமாரன்’ என்ற படத்திற்கு புக் செய்திருந்தார்.
ஆனால் என்ன காரணத்தினாலோ விஜய் சேதுபதி அவருக்குக் கால்ஷீட் கொடுக்காமல் இதுவரையில் 6 படங்களை முடித்துவிட்டார்.
இதனால் விஜய் சேதுபதி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் சுரேஷ் புகார் கொடுக்க.. பதிலுக்கு சுரேஷ் மீது விஜய் சேதுபதி நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்து இந்த அக்கப்போர் சில காலம் நடந்துவந்தது.
பல கட்ட பஞ்சாயத்துகளுக்கு பின்பும் சுரேஷ், விஜய் சேதுபதி தனது படத்தில் நடித்தே தீர வேண்டும் என்று உறுதியுடன் இருக்க.. நடிகர் சங்கத் தேர்தலால் விவகாரம் ஆறப் போடப்பட்டிருந்தது. இப்போது இந்தப் பிரச்சினையை சுமூகமாக பேசி முடித்துள்ளனர்.
இதன்படி ஸ்டூடியோ 9 சுரேஷ் தயாரிக்க நினைத்த ‘வசந்தகுமாரன்’ படத்திற்குப் பதிலாக சீனு ராமசாமி இயக்கும் ‘தர்மதுரை’ என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்துக் கொடுக்கப் போகிறாராம்.
எப்படியோ பிரச்சினை தீர்ந்தால் சரிதான்..!