இவரும் சினிமாவுலகத்துக்கு ‘பை பை’ சொல்கிறார்..

இவரும் சினிமாவுலகத்துக்கு ‘பை பை’ சொல்கிறார்..

'கிருஷ்ணவேணி பஞ்சாலை', 'உயிருக்கு உயிராக' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நந்தனா. மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ்த் திரையுலகில் இப்போதுதான் நுழைந்திருக்கிறார்.. கொஞ்ச காலம் ஓடி, கல்லா கட்டுவார் என்று பார்த்தால் திடீரென்று "போதும்பா உங்க சினிமாவுலகம்.. பை.. பை.." என்று சொல்லி திருமண வாழ்க்கைக்கு கடன்பட்டுவிட்டாராம்..

அடுத்த மாதம் 6-ம் தேதி ஹரி என்ற சாப்ட்வேர் என்ஜினீயரை மணக்கப் போகிறாராம். இதிலொரு முக்கியமான விஷயம் இது காதல் திருமணம் இல்லையாம்.. பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாம்.

கல்யாணம் பற்றி சந்தோஷமாக சொன்ன நந்தனா, ''கடந்த ஒரு வருஷமாவே வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்த்துக்கிட்டிருந்தாங்க... இப்போ நல்ல வரன் வந்தது. எனக்கும், என் பெற்றோர்களுக்கும் பிடித்து இருந்தது. ஒத்துக் கொண்டேன்.." என்றவர் கடைசியில் சொன்னதுதான் ஹைலைட்.. "திருமணத்துக்குப் பிறகும் நான் நடிக்கப் போவதில்லை...'' 

இது மாதிரி பேசியும், சொல்லியும் நிறைய கேட்டாச்சு.. வெயிட் பண்றோம் மேடம்..!