திருட்டு விசிடி.. திருட்டு விசிடி.. திருட்டு விசிடி.. என்று இப்போதெல்லாம் தினம்தோறும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் திரையுலகத்தினர். போலீஸை நம்பி பிரயோசனமில்லை என்று தாங்களே களத்தில் குதித்து திருட்டு விசிடி விற்பவர்களை கையும், களவுமாக பிடிக்கும் வேலையையும் செய்து வருகிறார்கள் திரையுலகத்தினர்.
இந்த வாரம் அண்ணன் ராதாகிருஷ்ணன் பார்த்திபனி்ன் வாரம். அவருடைய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படத்தின் திருட்டு விசிடிக்கள், பர்மா பஜாரில் விற்பதாகத் தகவல் கிடைத்தவுடன் தனது உதவியாளர்கள் உதவியுடன் அந்தக் கடைக்கு நேரில் சென்று பிடித்திருக்கிறார்.
இதன் பின்பு திருட்டு விசிடி தடுப்பு போலீஸுக்கும் தகவலைச் சொல்லி அவர்களை வரவழைத்து அவர்களிடத்தில் கடைக்காரரை ஒப்படைத்திருக்கிறார் பார்த்திபன்..
இந்த ரெய்டில் இந்த ஒரு கடை மட்டுமே மாட்டியது.. அதே வரிசையில் இருக்கும் அத்தனை கடைகளிலும் இந்தப் படத்தின் விசிடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இனிமேல் தர மாட்டார்கள். அந்த வகையில் ஒரு சந்தோஷம்தான்..!
ஆனால் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு தேமே என்று அமைதியாக ஏஸி ரூமில் அமர்ந்து கொண்டே கணக்குக் காட்டிக் கொண்டிருக்கும் காவல்துறையை என்னவென்று சொல்வது..?
இப்படியே ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய தீர்வுக்காக ரோட்டில் இறங்க ஆரம்பித்தால்.. கடைசியில் இந்தக் கடமை தவறாத காவல்துறை எதற்குத்தான் இருக்கிறது..?
நல்ல ஆட்சி நடத்துறாங்கப்பா..!
அண்ணன் பார்த்திபன் பர்மா பஜாரில் தனது படத்தின் திருட்டு விசிடியை கண்டுபிடித்த வீடியோ காட்சி இது :