விலகிப் போனவர்களையும் தேடிப் பிடித்து இழுத்து வரும் கோடம்பாக்கம் அடுத்து அழைத்து வந்திருப்பது நடிகை மீனாட்சியை.
‘கருப்பசாமி குத்தகைக்காரர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் மீனாட்சி. இதன் பிறகு ‘TN 07 AL 4777’, ‘ராஜாதிராஜா’, ‘பெருமாள்’, ‘தோரணை’, ‘அகம்புறம்’, ‘மந்திரப்புன்னகை’ போன்ற படங்களில் ஹீரோயினாகவே நடித்தார். கடைசியாக ‘துப்பாக்கி’ படத்தில் கெஸ்ட் ரோல் செய்திருந்தார்.
‘மந்திரப்புன்னகை’யைத் தவிர மற்ற படங்களில் இவர் காட்டிய அளவுக்கு அதிகமான கவர்ச்சியே இவரை மூட்டை கட்டிவிட்டது. இனிமேல் ஒன்றுமில்லை என்கிற அளவுக்கு ஆன பின்பு சொந்த ஊரான கொல்கத்தாவுக்கே சென்றவரை.. 2 வருடங்கள் கழித்து அழைத்து வந்திருக்கிறார்கள்.
விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘வெள்ளைக்கார துரை’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட வந்த மீனாட்சிக்கு வந்த இடத்தில் யோகம்.. ‘வில்லங்கம்’ என்ற படமும் அவருக்கு புக்காகியிருக்கிறது.. இதில் இவர்தான் ஹீரோயினாம்..
இந்நிலையில் அடுத்த லக்கி பிரைஸாக, ‘ஆடுகளம்’ படத்திற்கு பின்பு தனுஷ்-வெற்றிமாறன் இணையும் ‘சூதாடி’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக மீனாட்சியும் நடிக்கிறாராம்.. ஏற்கெனவே, லட்சுமி மேனன் ஒரு ஹீரோயினாக இதில் நடிக்கப் போகிறார்.
“இப்படி ஹீரோயினாக நடித்தபடியே ஒரு பாடலுக்கு நடனமாடுகிறீர்களே…?” என்றால், “அதிலென்ன தப்பு..? இயக்குநர் நம்மை நம்பி அழைத்திருக்கிறார் என்றால் அதில் வேலை செய்தால்தான் நமக்கு மரியாதை. எனக்கு இதிலெல்லாம் பெரிய ஈகோ கிடையாது.. இப்படி நாலைந்து படங்களில் நடித்தால்தான் பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கும்..” என்று சொல்லியிருக்கிறார்.
அழுத்தமாக தனது அடுத்த ரவுண்டை துவக்கியிருக்கிறார் மீனாட்சி..