full screen background image

நான் அப்படிச் சொல்லவே இல்லை – மறுக்கிறார் நடிகை கஸ்தூரி

நான் அப்படிச் சொல்லவே இல்லை – மறுக்கிறார் நடிகை கஸ்தூரி

‘சுசிலீக்ஸ்’ வெளியானதில் இருந்து திரையிலகில் ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ என்கிற வார்த்தையும் பேமஸாகிவிட்டது.

இது குறித்து எப்போதும் எந்த விஷயத்திலும் கருத்துக்களை தெரிவிக்க தயங்காத முன்னணி நடிகைகள்கூட இப்போதுவரையிலும் அமைதியாக இருந்து வருகிறார்கள். ஏன் திரைத்துறையின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அமைதி காப்பதாகத் தெரிகிறது.

இடையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னையும் ஒரு மலையாள இயக்குநர் இப்படி அழைத்த்தாக பேட்டியளித்தாகச் செய்தி வந்த்து. ஆனால் அப்படியொரு பேட்டியை நான் தரவே இல்லை என்று பின்னால் அவர் மறுத்தார்.

இதேபோல் இப்போது நடிகை கஸ்தூரி, டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாக செய்தித்தாளில் வெளியானது. “நடிகைகளை பட வாய்ப்புக்காக, படுக்கையறைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் உள்ளது” என்று கஸ்தூரி கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/casting-couch-in-filmdom-isnt-a-myth-it-does-exist/articleshow/57593669.cms

இந்த செய்தி வெளியானதும் உடனடியாக இதனை மறுத்திருக்கிறார் கஸ்தூரி. “நான் அந்தப் பத்திரிகைக்காக மகளிர் தினத்தை முன்னிட்டு சில விஷயங்களை பேசினேன். சத்தியமாக நான் இது பற்றி எதையும் சொல்லவில்லை. பேசவில்லை. பத்திரிகையாளர்கள் அவர்களாகவே எழுதிக் கொண்டுள்ளார்கள்..” என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கொடுத்துள்ள வீடியோ பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கஸ்தூரி பேசுகையில், “கடந்த 2 நாட்களாக என்ன செய்தி என தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு தற்போது நான் கிடைத்துள்ளேன்.

முற்றிலும் பொய்யான, கற்பனையான, உண்மைக்கு புறம்பான நான் சொல்லவே சொல்லாத ஒரு விஷயத்தை, நான் சொன்னதாக இணையதளம் முழுக்க பரபரப்பாக பிரபலப்படுத்தியுள்ளார்கள்.

இதை வெளியிட்டுள்ள ஊடகங்கள் யாரிடமும் நான் பேசவில்லை. மகளிர் தினத்துக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு மட்டும் பேட்டியளித்தேன். அதில்கூட நான் சொல்லாததைத்தான் இப்படி எழுதியுள்ளார்கள்.

பொதுவாகவே நான் கற்பனையான கிசுகிசு செய்திகளுக்கு பதில் சொல்வதில்லை. அவை அனைத்துமே என்னைப் பற்றி வந்த வதந்திகள். ஆனால், இச்செய்தி என்னை மட்டுமன்றி என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. நான் குடும்பம் என கூறுவது, நான் சார்ந்துள்ள திரையுலகம்தான். நான் கொடுத்த பேட்டியை முழுமையாக படித்துவிட்டு, நான் அப்படி கூறியுள்ளேனா என தெரிந்து கொள்ளுங்கள்.

நாங்கள் நல்லவர்கள், ஒழுங்கமானவர்கள், சராசரி மனிதர்கள் எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைவுள்ளது என ஒவ்வொருவரிடமும் சான்றிதழ் வாங்க வேண்டிய தேவை சினிமாக்காரர்களுக்கு கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள்… அதைப் பொறுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதும் நியாயமில்லை…” என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

சொல்லாததை சொல்லியதாக எழுதும் பழக்கத்தை பத்திரிகையாளர்கள் எங்கேயிருந்து கற்றுக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

Our Score