நீல்கிரிஸ் ட்ரீம்ஸ் எண்ட்டர்டெயின்மெண்ட் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய முதல் படைப்பாக ‘கூத்தன்’ என்ற படத்தை தயாரிக்கிறது.
இதன் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன், தன்னுடைய மகன் ராஜ்குமாரை கதாநாயகனாக நடிக்க வைத்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.
ஒளிப்பதிவு – மாட்ஸ் DF.Tech, எழுத்து, இயக்கம் – வெங்கி.A.L.
இந்தப் படத்தின் துவக்க விழா அரக்கோணம் அருகே உள்ள திருவெங்காடு சிவன் கோவிலில் 12-ம் தேதி நடந்தது.
இந்தக் கோவிலில் இந்த நிறுவனத்தின் தொடக்க விழா நடந்ததற்கு காரணம் ‘கூத்தன்’ படத்தின் கதை அந்தக் கோவில் சிவனை தொடர்புபடுத்தியது. அதனால்தான் இங்கு நடைபெற்றது.
இந்த திரைப்படத்தில் ராஜ்குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.