full screen background image

நடிகை இனியாவின் வீட்டில் கொள்ளையடித்தது அக்காவின் வருங்கால கணவராம்..!

நடிகை இனியாவின் வீட்டில் கொள்ளையடித்தது அக்காவின் வருங்கால கணவராம்..!

பாவம் நடிகை இனியா. இந்த மாதிரியான ஒரு தர்மசங்கடமான சிச்சுவேஷன்களை சினிமாவில் மட்டுமே பார்க்க வேண்டியிருந்த சூழலில் சொந்த வீட்டிலேயே பார்த்ததில் எப்படி மனம் நொந்து போயிருப்பாரோ தெரியவில்லை..!

Iniya-3

நடிகை இனியாவின் அக்கா ஸ்வாதி, மலையாள டி.வி.சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் திருவனந்தபுரம் பாற்றுர் பகுதியைச் சேர்ந்த பெயிண்ட் கடை ஊழியரான ஷாபின் என்பவரை காதலித்துள்ளார். ஷாபின் சாதாரண கடை ஊழியர் என்பதால் இனியாவின் குடும்பத்தில் இந்தக் காதலுக்கு கடும் எதிர்ப்பு இருந்துள்ளது.

காதலர்களும் தங்களது காதலில் உறுதியைக் காட்ட கடைசியாக வேறு வழியில்லாமல் இந்தக் கல்யாணத்திற்கு சம்மதித்து திருமணமும நிச்சயிக்கப்பட்டது. கடந்த மாத இறுதியில் திருவனந்தபுரத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பல மலையாள சினிமா பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் நடிகை இனியாவின் வீட்டில் திருட்டு நடந்தது. அப்போது இனியாவின் அக்கா திருமணத்திற்காக வீட்டு பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகையும் 5 லட்சம் ரொக்க பணமும் கொள்ளையடிக்கப்பட்டது.

இது குறித்து இனியாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தார்கள். போலீஸ் விசாரணையில் இனியா வீடு புகுந்து கொள்ளை அடித்ததே அவரது அக்கா ஸ்வாதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை ஷாபின்தான் என்று தெரிய வந்ததாம்.

ஸ்வாதிக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் ஷாபின் சமீப காலங்களில் அந்த குடும்பத்துடன் வருங்கால மாப்பிள்ளை என்கிற பாவனையுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இனியாவின் வீட்டு சாவியும் அவரிடம் இருந்திருக்கிறது. அந்தச் சாவியை வைத்து டூப்ளிகேட் சாவி செய்து நண்பர்களை துணைக்கழைத்து கொள்ளையடித்துள்ளார். பின்பு கிடைத்த பணம், நகை ஆகியவைகளை பங்கு பிரித்துக் கொண்டு தான் அப்பாவி போல இருந்திருக்கிறார். ஆனால் வீட்டில் கிடைத்த கைரேகை அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

இப்போது ஷாபினும், கொள்ளையடிப்பில் அவருக்கு உதவிய நண்பரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாவம்தான்..!

Our Score