full screen background image

நான் நடித்த 5 முக்கிய படங்களில் ராமானுஜனும் ஒன்று-சுஹாசினியின் பெருமிதம்..!

நான் நடித்த 5 முக்கிய படங்களில் ராமானுஜனும் ஒன்று-சுஹாசினியின் பெருமிதம்..!

கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘ராமானுஜன்’ திரைப்படம் தனது திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமென்று சொல்கிறார் நடிகை சுஹாசினி.

நேற்று இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி பிரசாத் கலர் லேப் தியேட்டரில் நடைபெற்றது. படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

“இந்தப் படத்தில் ராமானுஜனின் தாயாராக நடித்திருக்கிறார் சுஹாசினி. இவருடைய கேரக்டர் கதையை நகர்த்தி செல்வது போலவும், சில இடங்களில் வில்லித்தனமாகவும் அமைக்கப்பட்டுள்ளதாக” கூறினார் படத்தின் இயக்குநர் ஞானராஜசேகரன்.

Ramanujan Press Meet Stills (34)

சுகாசினி பேசும்போது, “நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்கிறேன்.

தமிழில் 50-க்கும் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும்  ஒரு பத்து படங்களைத்தான் என் கேரியரின் முக்கிய படங்களாக குறிப்பிடுவேன். அதில், ‘நெஞ்சத்தை கிள்ளாதே’, ‘பாலைவனச் சோலை’, ‘குடும்பம் ஒரு கதம்பம்’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’, ‘சிந்து பைரவி’, ‘மனதில் உறுதி வேண்டும்’ போன்ற படங்களும் அடங்கும். ஆனால், இப்போது ‘ராமானுஜன்’ படத்தில் நடித்தபிறகு நான் நடித்ததில் 5 முக்கிய படங்களில இந்த படமும் ஒன்றாகிவிட்டது.

இந்த படத்துக்காக 120 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டு பெண்கள் அணிந்த பதினாறு முழம் புடவையைக் கட்டிக் கொண்டு நடித்தேன். ரொம்ப கஷ்டமாக இருந்தது எனறாலும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும என்பதற்காக பக்காவாக என்னை மாற்றிக் கொண்டு நடித்தேன். அதிலும் கணிதமேதை ராமானுஜரின் அம்மாவாக நடிக்கக் கிடைத்ததை என் திரையுலக வாழ்க்கையில் பெருமையான விஷயமாகக் கருதுகிறேன்..” என்றார்.

Our Score