“கடின உழைப்பும், விடாமுயற்சியும்தான் என் வெற்றிக்குக் காரணம்..” – சொல்கிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி

“கடின உழைப்பும், விடாமுயற்சியும்தான் என் வெற்றிக்குக் காரணம்..” – சொல்கிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி

“2014-ம் வருஷம் உங்களுக்கு எப்படி இருந்தது..?” என்ற கேள்விக்கு நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய பேவரிட் அகலச் சிரிப்புடன் பதிலளித்துள்ளார்.

“இந்த வருடம் எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான வருடம். தமிழ்ச் சினிமாவுலகில் என்னுடைய பெயர் மிக அழுத்தமாக இந்தாண்டுதான் பதிவாகியுள்ளது.

‘அரண்மனை’ படம்  திரையுலகில் எனக்கு ஒரு விசாலமான  இடத்தை  தந்து உள்ளது. என்னுடைய திறமை மேல் நம்பிக்கைக் கொண்டு அந்த  பிரமாதமான கதாபாத்திரத்தை சுந்தர்.சி  சார் எனக்கு  அளித்ததற்கு நான் கொடுத்து வைத்து  இருக்க  வேண்டும். அவர் தொடர்ந்து தன்னுடைய படங்களில், வித்தியாசமான கதாபாத்திரங்கள் எனக்கு வழங்கி வருகிறார்.

அடுத்த வாரம் டிசம்பரில் வெளிவர இருக்கும் ‘மீகாமன்’ படத்தில் ஆர்யாவுக்கு இணையாக நடித்து உள்ளேன். இந்தப் படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான படமாக இருக்கும்.

2015 பொங்கல் தினத்தில் வெளிவரவிருக்கும் ‘ஆம்பள’ படத்தில் விஷாலுக்கு  ஜோடியாக நடித்து உள்ளேன். என்னுடைய நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள இந்த படம் ஏற்ற படமாக இருக்கும்.

அதற்கடுத்து வெளிவரவிருக்கும் ‘உயிரே’ படத்தில் என்னுடைய வயதுக்கு உகந்த கதாபாத்திரத்தில நடித்து உள்ளேன்.

அடுத்து நான் மிகவும் எதிர்பார்க்கும்  ‘வாலு’ எனக்கு  மிக  பொருத்தமான படமாகும். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் துடிப்பான  வலிமையான பாத்திரம் கிடைத்துள்ளது.

இதற்கெல்லாம் மேலே விஜய்  சாருடன், சிம்பு தேவன்  இயக்கதில் தற்போது நான் நடித்து வரும்  பிரம்மாண்டமான படைப்பு. இந்த படத்தில் நான் இளவரசியாக நடிக்கிறேன். படப்பிடிப்பில் இளவரசியாகவே நான் உணர்கிறேன்.

சிலர் எனக்கு கிடைத்கதெல்லாம் அதிர்ஷ்டத்தில் என்கின்றனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. கடின உழைப்புடன், விடாமுயற்சி இருந்தால்தான் எதிலும் வெற்றி கிடைக்கும். என்னுடைய கடின உழைப்பே என்னை இந்த உயரத்திற்குக் கொண்டு வந்திருப்பதாக நினைக்கிறேன். இனி, என்ன நடந்தாலும், நான் என் கடமையில் கண்ணாக இருப்பேன்..” என தனக்கே உரிய மந்திர புன்னகையோடு, கள்ளச் சிரிப்புடன் சொல்கிறார் ஹன்சிகா.

Our Score