full screen background image

“கல்யாணம் செஞ்சுக்கவே மாட்டேன்” – லட்சுமி மேனனி்ன் திடீர் முடிவு..!

“கல்யாணம் செஞ்சுக்கவே மாட்டேன்” – லட்சுமி மேனனி்ன் திடீர் முடிவு..!

இன்னும் ஸ்கூல் படிப்பையே முடிக்கலை.. அதுக்குள்ள கல்யாணம் பற்றி ஒரு திடமான முடிவெடுத்துவிட்டார் லட்சுமி மேனன்..

“நான் கல்யாணமே செஞ்சுக்க மாட்டேன்.. கல்யாணம் பண்ணிக்காம எத்தனை பேர் இருக்காங்க.. அவங்கெல்லாம் சாதிக்கலையா..? அப்படி நானும் கல்யாணம் செய்துக்காமலேயே சாதிக்கப் போறேன்.. ஏன் என்னால முடியாதா…?” என்று ‘குமுதம்’ பத்திரிகையில் எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்.

‘கும்கி’ படம் ஹிட்டான பின்பு “திருமணம் என்றால் அது கண்டிப்பா எங்க நாட்டு மலையாளப் பையனோடதான்…” என்று தனக்காக எந்த தமிழ் ஹீரோவும் காத்திருக்க வேண்டாம் என்பதை ஜாடைமாடையாய் சொன்னார் லட்சுமி மேனன்..

அப்படிச் சொன்ன இரண்டு வருடத்திற்குள் இப்படியொரு கொள்கை முடிவு..! இந்த அளவுக்கு தீர்மானமாக லட்சுமிக்கு அப்படியென்ன நேர்ந்தது என்றுதான் தெரியவில்லை.

ஆனாலும் கிசுகிசுக்களை வரவேற்கிறாராம்.. “கிசுகிசு வரட்டுமே.. விஷாலோடு சேர்ந்து நடிச்சா கிசுகிசு வரத்தான் செய்யும். வரட்டும்.. நான் அவரோட நடிச்ச ரெண்டு படமும் ஹிட். எனக்கு சேர்ந்து நடிப்பதற்கு ரொம்ப கம்பார்ட்டபிளான ஹீரோ அவர்தான்..” என்று சொல்லியிருக்கிறார்.

இது வரலட்சுமிக்குத் தெரிஞ்சால் என்னாகுமோ..?

Our Score