full screen background image

நடிகை அனுராதாவின் மகனும் ஹீரோவாகிவிட்டாராம்..!

நடிகை அனுராதாவின் மகனும் ஹீரோவாகிவிட்டாராம்..!

கலைக் குடும்பம்ன்னு பேர் எடுத்திட்டா அப்புறம் மேக்கப் சாமன்கள் வாங்க யோசிக்கவே மாட்டாங்க..! 1980-கள்ல சிலுக்கு ஸ்மிதாவுக்கு போட்டியா கலக்கல் டான்ஸ் ஆடிக்கிட்டிருந்தாங்க நடிகை அனுராதா. அவரோட கணவர் சதீஷும் டான்ஸ் மாஸ்டர்தான். அனுராதாவோட பொண்ணு அபிநயஸ்ரீயும்  இப்போ தெலுங்குல பெரிய டான்ஸ் மாஸ்டர். அனுராதாவோட பையன் கெவின் மட்டுமே பாக்கியிருந்தாரு. இப்போ அவரும் மேக்கப் பூசிட்டாராம்..

பிரைட் பியூச்சர் மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும்  ‘என்ன பிடிச்சிருக்கா’ன்ற படத்துல இந்த கெவின்தான் ஹீரோவாம்..  கதாநாயகியா பிரீத்தி விஜ்  அறிமுகமாகிறார்.

மற்றும் ரவி மரியா, ஜெரால்டு, சின்ராசு, டயானா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், ஸ்ரீதேவி அணில் ஆகியோர் நடிக்கிறார்கள். கதாநாயகியின் தாத்தாவாக தயாரிப்பாளர் பி.ஏ.பிரகாசம் அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவு   –   ராஜா

இசை   –   ஸ்ரீவித்யா கலை. இவர் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகிய இருவரைப் பற்றி ஆராய்ச்சி செய்து பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர்.

பாடல்கள்   –   விவேகா

கலை   –  கணேஷ் தேவராஜ்

நடனம்    –  காதல் கந்தாஸ், ராபர்ட், அபிநயஸ்ரீ,

ஸ்டண்ட்    –   திரில்லர் முகேஷ்

எடிட்டிங் –  E.கோபாலகிருஷ்ணன்

தயாரிப்பு மேற்பார்வை   – பி.விஸ்வநாதன்

தயாரிப்பு – பி.ஏ.பிரகாசம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சுப்புராஜ். இவர் இயக்குனர்கள் மணிவண்ணன், விக்ரமன், ரவி மரியா போன்றவர்களிடம் இருபது வருடங்களுக்கு மேல் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது…

“இந்த கதைக்கு புதுமுகங்களை தேடிக் கொண்டிருந்தபோது நடிகை அனுராதாவின் மகன் கெவின் பற்றி கேள்விப்பட்டு வரவழைத்துப் பார்த்தோம். பொருத்தமாக இருந்தார். உடனே ஒப்பந்தம் செய்தோம்.

உலகம் முழுக்க நம்ம கலாச்சாரத்தைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்க, நாமோ அந்நிய கலாச்சாரத்தை பெருமையாக நினைக்கிறோம். அந்நிய தேசத்தில் இருந்து வரும் ஒரு தாத்தா பேத்தி. பேத்திக்கு நமது கலாச்சாரத்தின் மீது பிடிப்பு ஏற்பட்டு, சிலம்பாட்டம் போன்றவற்றில் வீரனாக திகழும் கெவின் மீது காதல் கொள்கிறாள். அந்த காதலுக்கு ஏற்படும் தடைகளும் அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா…? என்பது கதை…” என்றார் இயக்குனர் சுப்புராஜ்.

Our Score