‘கோச்சடையான்’ புண்ணியத்தில் வரும் மே 10-ம் தேதி வெளியாகவிருக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் வெற்றி பெறும் என்ற அசாத்தியமான நம்பிக்கை சந்தானத்திற்கு..!
இதற்கடுத்தும் தொடர்ந்து ஹீரோ வேஷம் கட்டவே சந்தானம் விரும்புகிறார் போலும்..! இன்று வெளிவந்த ‘ஆனந்தவிகடன்’ இதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் காமெடி கிங் கவுண்டமணியுடன் இணைந்து நடிக்க விரும்புவதாக அவர் கொடுத்திருக்கும் பேட்டிதான் தன்னம்பிக்கையின் உச்சம்.
”உங்க ஆதர்சம் கவுண்டமணியும் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சுட்டாரே!”
”எனக்கு தங்கவேலு, கவுண்டமணி… இவங்க ரெண்டு பேரும்தான் இன்ஸ்பிரேஷன்னு பல தடவை சொல்லியிருக்கேன்.
கவுண்டமணி அண்ணன்கிட்ட எப்பப் பேசினாலும், செம லந்து கொடுப்பார். ஏதோ ஒரு படம் வந்து செம மொக்கை வாங்கின சமயத்துல பேசினேன். ‘அண்ணே அந்தப் படம் பயங்கரமாப் போயிட்டு இருக்கு. டிக்கெட்டே கிடைக்கலையாம்’னு சொன்னேன். பட்டுன்னு, ‘ஏன் டிக்கெட்டே அடிக்கலையா?’னு கேட்டார் பாருங்க ஒரு கேள்வி… அதுதான் கவுண்டர்!
சுந்தர்.சி, ராஜேஷ், பூபதி பாண்டியன், சுராஜ்னு காமெடியில பின்ற எல்லா டைரக்டர்ஸும், ‘அவர்கூட சேர்ந்து ஒரு படம் பண்ணுங்க. சூப்பரா இருக்கும்’னு சொல்லுவாங்க. அந்த ஐடியா எனக்கும் உண்டு. ஆனா, அவர்கிட்ட இதைப் பத்தி நான் இதுவரைக்கு பேசினதே இல்லை.
இப்போ இந்தப் பேட்டி மூலமா சொல்றேன்… இப்ப அவரும் ஹீரோவா பண்ணிட்டு இருக்கார். நானும் பண்றேன். அதனால எங்க ரெண்டு பேருக்கும் ஏத்த மாதிரி டபுள் ஹீரோ சப்ஜெக்ட் வந்துச்சுனா, அண்ணன்கிட்ட போய் கேட்கலாம்னு இருக்கேன்…”
மகான் கவுண்டமணி, இதைப் படிச்சிட்டு என்ன கமெண்ட் அடிச்சாரோ.. அந்த முருகனுக்கே வெளிச்சம்..!!!