இந்திய சினிமா இயக்குனர்களில் தனி சிறப்பு பெற்றவர் இயக்குனர் பிரியதர்ஷன். என்றும் தனது இளமைத் துள்ளும் எண்ணங்களைக் கொண்ட இயக்குனர் பிரியாதர்ஷன் மொழி, எல்லைகள் கடந்து பல்வேறு வயதினரை ரசிகர்களாக கொண்டுள்ளார்.
பிரியதர்ஷன் தனது அடுத்த படைப்பை தனது சிஷ்யரான இயக்குநர் விஜய்யின் Think Big Studios நிறுவனத்திற்காக இயக்குகிறார். இயக்குனர் விஜய்யின் மனைவியும், நடிகையுமான அமலாபால் விஜய், பெயர் சூட்டப்படாத இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார்.
‘சைவம்’ மற்றும் வெளிவர தயாராகி வரும் ’நைட் ஷோ’ திரைப்படங்களை தொடர்ந்து Think Big Studios சார்பில் இந்தப் படத்தை A.L.அழகப்பன் மற்றும் அமலாபால் விஜய் தயாரிக்கிறார்கள்.
தன் நடிப்பால் கதாபாத்திரங்களாகவே வாழும் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் இப்படம் சர்வதேச ரசிகர்களையும் ரசிக்க வைக்கும் படைப்பாக உருவாகவுள்ளது. தேசியளவில் அனைவராலும் பாராட்டப்படும் சாபு சிரில் இப்படத்தின் புரடக்ஷன் டிசைனராக பண்ணியாற்றவுள்ளார்.
நடிகை அமலாபால் விஜய் இப்படம் பற்றி கூறுகையில், “நான் தயாரிக்கும் முதல் படமே சர்வதேச ரசிகர்களுக்கான படமாய் தயாரகவுள்ளது. ப்ரியதர்ஷன் சார், சந்தோஷ் சிவன் சார், பிரகாஷ்ராஜ் சார், ஸ்ரேயா ரெட்டி என தரமான கலைஞர்கள் இருப்பது இப்படத்திற்கு பெரிய பலம். ஆகஸ்ட் மாதம் மத்தியில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். எங்கள் Think Big Studios தயாரிப்பு நிறுவனத்திற்கு இப்படம் சர்வதேச அங்கீகாரத்தை நிச்சயம் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்…” என பொங்கும் புன்னகையுடன் கூறுகிறார்.