full screen background image

நடிகர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்திக்க வருகிறது நிர்வாகிகள் குழு..!

நடிகர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்திக்க வருகிறது நிர்வாகிகள் குழு..!

நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினர் முன் வைத்த முக்கியக் குற்றச்சாட்டுக்களில் ஒன்று.. “நடிகர்களாக இல்லாதவர்களும் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்..” என்பதுதான்.

இதற்கு உதாரணமாக ராதிகாவின் மகள் ரேயான், சரத்குமாரின் டிரைவர், சரத்குமாரின் அரசியல் பி.ஏ. நடேசன் போன்று தகுதியில்லாத பலரும் சேர்க்கப்பட்டிருப்பதால்தான் சங்க உறுப்பினர்களின் எண்ணி்ககை இத்தனை தூரம் அதிகமானது என்று பாண்டவர் அணி குற்றம்சாட்டியது.

ஆட்சிக்கு வந்ததும் முதலில் தகுதியான உறுப்பினர்கள் யார், யாரென்று கண்டறியும் வேலையைத்தான் முதலில் துவக்கப் போவதாக சமீபத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில்கூட பொருளாளர் கார்த்தி சொல்லியிருந்தார்.

இப்போது அதற்கான நடைமுறைகளை துவக்கிவிட்டனராம். இது குறித்து இன்று சங்கத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு  இதனைத் தெரிவிக்கிறது.

“நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடக நடிகர்கள் பற்றிய விவரம் அறியும் கணக்கெடுப்பு விரைவில் துவங்கவுள்ளது..!!

நடிகர் சங்கத்தில் உள்ள  நிர்வாகிகள்  பத்து பேர் தனி குழுக்களாக மாவட்டவாரியாக பிரிக்கப்படுவார்கள்.

அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அங்குள்ள நாடக நடிகர்களை நடிகைகளை அவர்களுடைய வீட்டிற்கே நேரில் சென்று அவர்களை சந்தித்து அவர்களது வாழ்வாதாரம் பற்றியும், வருமானம் மற்றும் அவர்களது தற்போதைய நிலை, செய்யும் தொழில் போன்றவைகளை நேர்த்தியாக கணக்கெடுத்து தலைமைக்கு தெரிவிப்பார்கள்.

இதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. இந்த சர்வே எடுக்கும் பணி தீபாவளி பண்டிகைக்கு  பின் துவங்கி மேற்கூறியவாறு முதற்கட்ட வேலையாக செய்து முடிக்கப்படவுள்ளது.” என்று அறிவித்துள்ளனர்.

நல்ல வேலை. முதலில் இதைச் செய்து தகுதியவற்றவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தகுதியுள்ளவர்களுக்கு உதவிகளைச் செய்தால் சங்கத்திற்கு பணிச் சுமையும், பணச் சுமையும் குறையும்.

Our Score