full screen background image

நடிகர் சங்கத்தின் சார்பில் ரஜினி, கமலுக்கும் தீபாவளி பரிசாக புது வேஷ்டி,சட்டை..!

நடிகர் சங்கத்தின் சார்பில் ரஜினி, கமலுக்கும் தீபாவளி பரிசாக புது வேஷ்டி,சட்டை..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து இன்று கிளம்பி வந்திருக்கும் செய்தி இது :

“தீபாவளியை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமல் உட்பட அனைவருக்கும் பரிசு பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிதாக பொறுபேற்றுள்ள தலைமை, வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களான சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன்  கமல் உட்பட மொத்தம் 3,500 நபர்களுக்கும் விழாக் கால பரிசாக ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு சேலையும் இதனுடன் உறுப்பினர்களுக்கு ஒரு பை நிறைய இனிப்பும் வழங்கப்படவுள்ளது.

இந்த பரிசுப் பொருட்கள் அனைத்தும் உறுப்பினர்களின் வீட்டிற்க்கே சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..” என்று அறிவித்திருக்கிறார்கள்.

நல்லதுதான்.. கஷ்டப்படுறவங்களுக்கு செய்ய வேண்டியதுதான். இதைச் செய்தியா வெளிப்படுத்தும்போது இப்படியா எழுதுறது..?

“கமலும், ரஜினியும் என்ன வேஷ்டி, சட்டைக்கே வழியில்லாமலா இருக்காங்க. அவங்களுக்கும் சேர்த்துன்னு சொன்னா என்ன அர்த்தம்..?”ன்னு நாலு நாளைக்கு எழுதியே கொல்லப் போறாங்க..!!!

Our Score