full screen background image

நடிகர் சங்கத் தேர்தல் – வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அறிவிப்பு..!

நடிகர் சங்கத் தேர்தல் – வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அறிவிப்பு..!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் மோதுகின்றன. இரு அணி சார்பிலும் தலைவர், பொதுச் செயலாளர், 2 துணைத் தலைவர்கள், ஒரு பொருளாளர் மற்றும் 24 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 58 பேர் போட்டியிடுகின்றனர். 

ஒரு சுயேட்சை வேட்பாளர் தலைவர் பதவிக்கும் பொதுச் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார். இன்னொரு சுயேட்சை வேட்பாளர் துணைத் தலைவர் பதவிக்கு நிற்கிறார்.

சரத்குமார்  அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமார், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியும்,  விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிடுகிறார்கள். மற்றும் இரு அணியிலும் துணைத் தலைவர், செயற் குழு உறுப்பினர்கள் பதவிக்கு நடிகர்-நடிகைகள் போட்டியிடுகிறார்கள்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்குச் சீட்டு எண்களை (சின்னங்களை) தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபன் வெளியிட்டுள்ளார்.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் சரத்குமாருக்கு ‘2’ என்ற சின்னமும், நாசருக்கு ‘1’ என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுச் செயலாளர் பதவிக்கு  போட்டியிடும் ராதாரவிக்கு ‘1’ என்ற சின்னமும், விஷாலுக்கு ‘3’ என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும்  விஜயகுமாருக்கு ‘5’ என்ற சின்னமும், நடிகர் சிம்புவுக்கு ‘4’ என்ற சின்னமும் விஷால் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு ‘போட்டியிடும் கருணாசுக்கு ‘1’ என்ற சின்னமும், பொன் வண்ணனுக்கு ‘3’ என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சரத்குமார்  அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.எஸ். கண்ணனுக்கு ‘1’ என்ற சின்ன மும், விஷால் அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் கார்த்திக்கு ‘2’ என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Our Score