full screen background image

நடிகர் சங்கத் தேர்தல் – போட்டியிடும் வேட்பாளர்கள் யார், யார்..?

நடிகர் சங்கத் தேர்தல் – போட்டியிடும் வேட்பாளர்கள் யார், யார்..?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. சரத்குமார், விஷால் அணி சார்பில் மோதும் வேட்பாளர்கள் பட்டியல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சரத்குமார் அணி வேட்பாளர்கள் பட்டியல் :

தலைவர் பதவிக்கு சரத்குமார், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி, துணைத் தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

24 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ராம்கி, டி.பி.கஜேந்திரன், நளினி, நிரோஷா, கே.என்.காளை, ஜாக்குவார் தங்கம், பவன், ‘சிசர்’ மனோகர், கே.ராஜன், குமரேசன், ‘ஐஸ்’ அசோக், வீரமணி, ரவிக்குமார், மோகன்ராம், கே.ஆர்.செல்வராஜ். எம்.ராஜேந்திரன், ‘பசி’ சத்யா, எஸ்.என்.பார்வதி, ஜெயமணி, திருச்சி மஸ்தான், மதுரை கலைமணி, புதுக்கோட்டை இசையரசன், நாமக்கல் ராஜேந்திரன், சாந்தாராம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

விஷால் அணி வேட்பாளர்கள் பட்டியல் :

தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், துணைத் தலைவர்கள் பதவிக்கு பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் பதவிக்கு கார்த்தி போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ஜூனியர் பாலையா, கோவை சரளா, ராஜேஷ், பிரசன்னா, ரமணா, நந்தா, உதயா, சங்கீதா, பூச்சி முருகன், பசுபதி, தளபதி தினேஷ், குட்டி பத்மினி, அயூப்கான், பிரேம் குமார், ஸ்ரீமன், காமராஜ், என்.டி.விஸ்வநாதன், காளிமுத்து, பிரேம்குமார், சிவகாமி, ரத்னப்பா, சிவகாமி, விக்னேஷ், பாலதண்டபாணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. மாலை 4 மணிக்கு போட்டியிட தகுதியுள்ள வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. போட்டியில் இருந்து விலகிக் கொள்ள விரும்புவோர் 7–ம் தேதி வாபஸ் பெறலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் 8–ம் தேதி வெளியிடப்படுகிறது.

தபால் மூலம் அனுப்பப்படும் ஓட்டுகள் 17–ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணியினரும் தற்போது தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வீடு வீடாக சென்றும், டெலிபோன் மூலமும் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

விஷால் அணியினர் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆதரவு நடிகர்கள் கூட்டத்தை கூட்டி, தேர்தல் அறிக்கை வெளியிட்டனர். அப்போது எதிரணியினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.

இதற்கு பதிலடியாக சரத்குமார் அணியினரும் அதே ராகவேந்திரா மண்டபத்தில் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளனர். வருகிற 11–ம் தேதி மாலை இந்த கூட்டம் நடக்கிறது. இதில் சரத்குமாரை ஆதரிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் நாடக நடிகர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில், தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட உள்ள முக்கிய அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற உள்ளதாம்.

Our Score