full screen background image

“கந்து வட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்..” – நடிகர் விஷால் அறிக்கை

“கந்து வட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்..” – நடிகர் விஷால் அறிக்கை

மதுரை பைனான்ஸியர் அன்புச்செழியன் அச்சுறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளர் அசோக்குமாரின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால், “கந்து வட்டிக் கும்பலை தமிழ்த் திரையுலகத்தி்ல இருந்து விரைவில் விரட்டியடிப்போம்” என்று சொல்லியுள்ளார்.

இது குறித்து விஷால் வெளியிட்டுள்ள அறி்க்கை இது :

“கந்து வட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக்குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன்.

இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது கந்துவட்டி இன்று திரைத் துறையிலும் ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது.

எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்து வட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம்.

விரைவில் இந்த கந்து வட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாகத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும்.

பொறுத்தது போதும். கூட்டமைப்பு என்ற பெயரில் தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி கும்பலுக்கும் கட்டப் பஞ்சாயத்து நபர்களுக்கும் நேரடி எச்சரிக்கை விடுகிறேன்.

இனியாவது திருந்தி தமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.இது நேர்மையாக தொழில் செய்யும் அனைத்து தயாரிப்பாளர்களின் முடிவு.

காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். இது தற்கொலை அல்ல.கொலை. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது         செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களோ அல்லது தயாரிப்பாளர்களோ, நேர்மையான அசோக்குமார் போல இன்னொரு அப்பாவி பலியாகாத அளவுக்கு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.

– விஷால்
தலைவர்,

தயாரிப்பாளர் சங்கம்

Our Score