நடிகர் விமல் கை நிறைய படங்களை வைத்திருந்தும் புதிது, புதிதாக வாய்ப்புகளும் அவரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
தற்போது அவர் புதிதாக நடிக்கவிருக்கும் படத்தை உதய் புரோடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிச்சர்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் புதிய படத்தில் நடிகர் பாண்டியராஜன் விமலின் தந்தையாக நடிக்கிறார். சகோதரியாக அனிதா சம்பத் நடிக்கிறார்.
மேலும், வத்சன் வீரமணி, ஆடுகளம் நரேன், பால சரவணன், தீபா, நேகா ஜா மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.
எழுத்து, இயக்கம் – மார்ட்டின் நிர்மல் குமார், திரைக்கதை – மார்ட்டின் நிர்மல் குமார் மற்றும் வத்சன் வீரமணி, ஒளிப்பதிவு – கமில் ஜே அலெக்ஸ், இசை – காட்வின்.
குடும்ப உறவுகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகவுள்ளது. தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் ஒரு அண்ணனின் வாழ்வை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது.