28 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கும் ஊர்வசி

28 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கும் ஊர்வசி

தமிழில் 1983-ம் ஆண்டில் வெளியான ‘முந்தானை முடிச்சு’ படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ஊர்வசி. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இதேபோல் இயக்குநர் பிரியதர்ஷனும் மலையாள இயக்குநராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

இவருடைய இயக்கத்திலும் ஊர்வசி பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக பிரியதர்ஷனின் இயக்கத்தில் 1993-ம் ஆண்டு வெளியான ‘மிதுனம்’ என்ற படத்தில் ஊர்வசி நடித்திருந்தார். அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.

ஆனால் இப்போது… 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரியதர்ஷனின் இயக்கத்தில் ஊர்வசி நடித்து வருகிறார். தமிழில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ‘அப்பத்தா’ என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன். மேலும் இந்தப் படம் ஊர்வசியின் 700-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score