Skyman Films International நிறுவனத்தின் நிறுவனரான கலைமகன் முபாரக்கின் தயாரிப்பில் முகேன் சூரி பிரபு ஆகிய பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் படம் ‘வேலன்’.
இப்படத்தின் Motion Poster சமீபத்தில் Think music youtube சேனலில் வெளியாகி 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்தும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது .
இப்படி தனது முதல் தயாரிப்பில் பிசியாக இருக்கும் இந்நிறுவனம், தற்போது இரண்டாவது தயாரிப்பாக ‘இடி முழக்கம்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்குகிறார்.
இந்தப் படத்தில் G.V.பிரகாஷ் குமார் & காயத்ரி ஷங்கர், சரண்யா பொன்வண்ணன், மனோபாலா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முதல் கட்டமாக இயற்கை எழில் கொஞ்சும் தேனி பகுதிகளில் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பாண்டிச்சேரி பகுதிகளில் நடைபெற்று வருகிறது .
அப்போது பாண்டிச்சேரியில் தான் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் சேதுபதி, தனது குருநாதரான சீனு ராமசாமி இயக்கும் ‘இடி முழக்கம்’ படப்பிடிப்பும் பாண்டிச்சேரியில் அருகிலேயே நடந்து வருவதை அறிந்து அங்கே விஸிட் அடித்தார்.

இந்த சந்திப்பில் விஜய் சேதுபதி தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், மற்றும் இயக்குநர் சீனு ராமசாமியோடு ஒரு முக்கிய விஷயம் பற்றிப் பேசியதாகத் தகவல்..!
அப்போ ஏதோ ஒரு சம்பவம் இருக்கு..!