full screen background image

‘தலைவி’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகிறது

‘தலைவி’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகிறது

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’  வரும் செப்டம்பர் 10-ம் தேதியன்று வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங், பிருந்தா பிரசாத் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இயக்குநர் ஏ.எல்.விஜய் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.  தமிழ்ப் பதிப்புக்கு மதன் கார்க்கியும், இந்திக்கு ரஜத் அரோராவும் வசனம் எழுதியுள்ளனர்.

இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்குத் தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்தப் படம் கடந்த வருடமே வெளியீட்டுக்குத் தயாராக இருந்தும் கொரோனா தொற்று, லாக் டவுன் போன்ற காரணங்களால் படத்தை வெளியிட முடியாமல் போனது.

ஆனாலும், பிரம்மாண்டமான செலவில் உருவாகியுள்ள இந்தத் தலைவி படத்தை திரையரங்களில்தான் வெளியிட வேண்டும் என்பதில் படக் குழுவினர் உறுதியாக இருந்தனர்.

தற்போது தமிழ் நாட்டில் நேற்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டுத் தேதியை தடாலடியாக அறிவித்துள்ளது இந்தப் படக் குழு.

வரும் செப்டம்பர் 10-ம் தேதி ‘தலைவி’ திரைப்படம் வெளியாகும் என்று புதிய போஸ்டருடன் படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

 
Our Score