full screen background image

சீன பெருந்தலைவர் மாசேதுங்கை கிண்டல் செய்யும் கதையை சொன்ன நடிகர் விஜய்..!

சீன பெருந்தலைவர் மாசேதுங்கை கிண்டல் செய்யும் கதையை சொன்ன நடிகர் விஜய்..!

இளைய தளபதி விஜய் இன்றைக்கு ‘தெறி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது குறிப்பிட்ட ஒரு கதை, நிச்சயம் நாளைய பொழுதுகளில் ஒரு சர்ச்சையை கிளப்பப் போவது உறுதி..!

நடிகர் விஜய் மேடையில் சொன்ன கதை இதுதான்..

“வாழ்க்கையில் கர்வம் இல்லாமல் இருக்கணும். இதுக்கு நான் ஒரு கதை சொல்றேன்.

ஒரு நாள் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியான மாவோ, சாலையில் போகும்போது ரோட்டோரமாக ஒரு சிறுவன் அவருடைய போஸ்டர்களை வைத்து விற்பனை செய்வதை பார்த்தார். அந்தச் சிறுவனின் அருகில் சென்று பார்த்தபோது, அங்கேயிருந்த அனைத்து போஸ்டர்களுமே தன்னுடையதுதான் என்று தெரிந்து கொண்டார்.

அந்தச் சிறுவனிடம், ‘இனிமேல் என் போஸ்டரை மட்டும் போடாதப்பா.. மத்த தலைவர்களின் போஸ்டர்களையும் போட்டு விற்பனை செய்யுப்பா..’ என்றார். அதற்கு அந்தச் சிறுவன்.. ‘மத்தவங்க போஸ்டரெல்லாம் வித்திருச்சு.. இதுதான் விக்காதது..’ என்றானாம்.

எனவேதான் சொல்றேன்.. வாழ்க்கைல கர்வப்படவே கூடாது.”

இதுதான் விஜய் சொன்ன கதை..!

Mao_Zedong_portrait

விஜய் சொன்ன ‘மாவோ’ என்னும் மாசேதுங் நவீன சீனாவை வடிவமைத்தவர். கம்யூனிஸத்தின் கீழ் சீன பேரரசை நிறுவியவர். சீனாவின் முதல் கம்யூனிஸ்ட் ஜனாதிபதி. தான் சாகின்றவரையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக விளங்கியவர். இப்போதும் உலகம் தழுவிய பொதுவுடமை பேசும் அனைத்து வகையான கம்யூனிஸ்ட்களுக்கும் கண்கண்ட தெய்வம் இவர்தான்..!

இவரைப் பற்றிய இப்படியான கிண்டல்கள் எல்லாம் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் அனைத்து பத்திரிகைகளிலும் ஒரு காலத்தில் வலம் வந்தவைதான். இன்றுவரையிலும் கம்யூனிஸத்தை எதிர்ப்பவர்கள் சொல்லும் கிண்டல் கதை இது..!

இந்தக் கதையை எந்த புண்ணியவான் விஜய்யின் காதில் ஓதினாரோ தெரியவில்லை. அதையாவது சரியாகச் சொல்லிக் கொடுத்தார்களா..? சீனாவை, ரஷ்யா என்று பெயர் மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

அப்படியிருந்தாலும் இதுவொரு உலகளாவிய கம்யூனிஸத்தின் பெருந்தலைவரை கிண்டல் செய்யும் கதை என்பது விஜய்க்கு தெரிந்திருக்க வேண்டாமா..? இந்தக் கிண்டல் பேச்சு இந்தப் பட விழாவுக்கு தேவையில்லாதது. நேற்றைய விழாவுக்கே திருஷ்டி பட்டது போலாகிவிட்டது இந்த விஷயம்..!

Our Score