full screen background image

‘ஒரு மெல்லிய கோடு’ உண்மைச் சம்பவமா..?

‘ஒரு மெல்லிய கோடு’ உண்மைச் சம்பவமா..?

அக்ஷயா கிரியேசன்ஸ் பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘ஒரு மெல்லிய கோடு.’  இந்தப் படத்தில் அர்ஜுன், ஷாம் இருவரும் கதாநாயகர்களாக  நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக  அக்ஷாபட்,  நேஹா சக்சேனாவும், மற்றும் மனிஷா கொய்ராலா ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இசை – இசைஞானி இளையராஜா – படத் தொகுப்பு – K.V.கிருஷ்ணா ரெட்டி, ஒளிப்பதிவு  – சேது ஸ்ரீராம், நடனம் – விட்டல், கலை – ஆனந்தன், நிர்வாக தயாரிப்பு – இந்துமதி, தனஞ்செய் குண்டப்பூர், எழுத்து, இயக்கம் – ஏ.எம்.ஆர்.ரமேஷ்.

படம் பற்றி இயக்குனர் A.M.R.ரமேஷ் பேசியபோது, “நான் இயக்கிய அனைத்து படங்களுமே  நிஜ சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதுதான்.

இந்தப் படதின் கதை நிஜ சம்பவமா… இல்லையா என்பதை படம் பார்க்கும்போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள். படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ்வரை படு வேகமான திரைக்கதை இருக்கும். ஆக்ஷன் திரில்லர் கலந்து படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் 1001-வது படம் இது. அவரது பின்னணி இசை படத்தின் திரைக்கதைக்கு மிகப் பெரிய பலம். அவரது இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளன. படத்தின் அணைத்து கட்ட பணிகளும் முடிந்துவிட்டது. படம் விரைவில் வெளியாக உள்ளது…” என்றார்.

Our Score