நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

நடிகர் விஜய் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு அடுத்தத் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய விவகாரத்தில் கூறப்பட்ட தீர்ப்பில் தன் மீது தனி நீதிபதி கூறியிருந்த சில கருத்துக்களை நீக்கக் கோரியும், தனக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் அபராதத்தை நீக்கும்படியும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தின் அப்பீல் பென்ச்சில் மேல் முறையீடு செய்திருந்தார்.

அந்த வழக்கு கடந்த இன்று நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அடங்கிய பென்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான விஜய் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கில் மேலும் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் விசாரணையை திங்கள்கிழமைக்கு தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்படி நீதிபதிகளும் இந்த வழக்கினை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Our Score