நடிகர் சிம்புவின் படங்கள் ரிலீஸாகுதோ இல்லையோ.. அவருக்கு படங்கள் மட்டும் கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது.
நயன்தாராவுடன் நடித்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ மே 20-ம் தேதி ரிலீஸாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் சிம்புவின் படம் காலவரையறையின்றி ஒத்திப் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிம்பு புதிய படத்தில் நடிக்கப் போகிறாராம்.. இந்தப் படத்திற்கு தலைப்புதான் மிக விசேஷமானது. ‘AAA’ என்ற அடைமொழியோடு ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ என்று நீட்டமாக பெயர் வைத்திருக்கிறார்கள்.
முன்னதாக இந்தப் படத்திற்கு ‘வெர்ஜின் மாப்ள’ என்று பெயர் வைத்திருந்தார்கள். அதைவிட இந்த நீளமான டைட்டில்தான் பொருத்தமாக இருக்கிறது என்பதால் இப்படியொரு டைட்டிலாம்..!
குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார்.
‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்குகிறாராம். சிம்புவுக்கு பொருத்தமான ஜோடிதான்.. படம் எப்படி இருக்கும் என்பதை இப்போதே யூகிக்க முடிகிறது..! வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
படத்தில் சிம்புவுக்கு 3 கெட்டப்புகளாம்.. ஹீரோயின்கள் யார், யாரென்று தெரியவில்லை. தெரிந்த பின்பு அதற்கொரு தனி பஞ்சாயத்து நிச்சயம் இருக்கும் என்பது மட்டும் புரிகிறது..!
“ஆண்டவன்தான் ஓட்டுறான்.. உன்னையும் போட்டு ஆட்றான்” என்று படத்தின் ஸ்லோகன் சொல்கிறது..!
உண்மையா.. இதை நாமதான சிம்புவை பார்த்து சொல்லணும்..!?










