full screen background image

எல்லாமே நீதான் – முன்னோட்டம்

எல்லாமே நீதான் – முன்னோட்டம்

மைதிலி குமாரி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘எல்லாமே நீதான்.’

இந்தப் படத்தை தயாரித்து, நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கவும் செய்கிறார் கே.எஸ்.சிவா. நாயகியாக நம்ரதா, நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். வில்லனாக ஜிந்தா நடிக்கிறார். மற்றும் ஜெயமணி, தெனாலி, சின்ராசு ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இசை – குட்லக் ரவி, ஒளிப்பதிவு – தசரதன், எடிட்டிங் – அபி, பாடல்கள் – ரமேஷ் பாரதி, விக்ரம் செந்தமிழ், நடனம் – ராம் முருகேஷ், தயாரிப்பு நிர்வாகம் – ஸ்ரீதர். கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் – கே.எஸ்.சிவா.

படம் பற்றி இயக்குநர் சிவா பேசும்போது, “மருத்துவக் கல்லூரி மாணவரான சிவா, பொறியியல் கல்லூரி மாணவி மைதிலியை காதலிக்கிறார். சிவாவை சந்திக்க மைதிலி காத்திருக்கும்போது போதை ஆசாமிகளால் கடத்தப்பட்டு கொலையாகிறாள்.

அவளைத் தேடிப் போன சிவாவை ஆசாமிகள் கத்தியால் குத்த அதிலிருந்து தப்பி பிழைத்து காதலியை கொன்றவர்களை பழி வாங்க துடிக்கிறார் சிவா. அவருக்கு கல்லூரி மாணவர்கள் சிலர் உதவி செய்கிறார்கள். அதில் ஒரு பெண் சிவாவை காதலிக்கிறார். அவரது காதலை ஏற்றாரா இல்லை… கயவர்களை பழி வாங்கினாரா என்பதுதான் படத்தின் திரைக்கதை. முற்றிலும் காதல் கதையாக உருவாகி உள்ளது இந்த ‘எல்லாமே நீதான்..” என்றார். 

Our Score