தமிழ் மூவி மேக்கர்ஸ் சங்கத்திற்காக சிம்பு சம்பளம் வாங்காமல் நடிக்கும் படம்..!

தமிழ் மூவி மேக்கர்ஸ் சங்கத்திற்காக சிம்பு சம்பளம் வாங்காமல் நடிக்கும் படம்..!

நடிகர் சிம்பு தனது தாய் உஷா ராஜேந்தர் தலைவராக இருக்கும் தமிழ் மூவி மேக்கர்ஸ் சங்கத்தின் வளர்ச்சி நிதிக்காக ஒரு திரைப்படத்தில் இலவசமாக நடித்துத் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தார்.

இப்போது அந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்தப் படத்தை தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிக்கிறார். சிம்பு நடித்த ‘வானம்’ படத்திற்கு வசனம் எழுதிய ஞானகிரி என்பவர் இந்தப் புதிய படத்தை இயக்கப் போகிறாராம்.

இது தொடர்பாக ‘தமிழ் மூவி மேக்கர்ஸ் சங்கம்’ இன்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், “தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தலாமா என நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய நேரத்தில், *தாமாக முன்வந்து ஒரு படத்தில் நடித்து கொடுப்பதாக அறிவித்த நமது சங்க உறுப்பினர் திரு. சிலம்பரசன் TR அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த படத்தின் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ உதவி, வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

சங்க வளர்ச்சிக்காகவும் தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் உருவாக்கப்படும் இந்த படத்தை சங்கத்தின் துணைத் தலைவர் திரு.சிங்காரவேலன் மிகுந்த பொருட்செலவில் தயாரிப்பார் என்பதையும், வானம்’ படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகி புகழ்பெற்ற திரு.ஞானகிரி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவார் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

இதற்கான படப்பிடிப்பு விரைவில் துவக்கப்பட்டு இந்த ஆண்டே படம் திரைக்கு வரும் என்பதையும் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்…” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

Our Score