‘பாகுபலி’யின் முதல் போஸ்டர் வெளியீடு..!

‘பாகுபலி’யின் முதல் போஸ்டர் வெளியீடு..!

பிரமாண்டமான பொருட்செலவில் தமிழ், தெலுங்கில் தயாரிக்கப்பட்டு வரும் ‘பாகுபலி’ படத்தின் முதல் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார்கள்..!

‘மரியாதை ராமண்ணா’, ‘நான் ஈ’ போன்ற படங்களை இயக்கிய சூப்பர் ஹிட் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படம் இது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.

இதில் தெலுங்கு நடிகர் பிரபாஸ், ராணா டக்குபதி, அனுஷ்கா, தமன்னா, சுதீப், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் மற்றும் பிரபலங்களெல்லாம் நடித்து வருகிறார்கள். தெலுங்கின் பிரபல இயக்குநரும், ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திரராவ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.

தீபாவளியன்று முதல் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்றைக்கு பிரபாஸின் முதல் போஸ்டரை ரிலீஸ் செய்திருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி.

Prabhas First Look Poster From Baahubali - Tamil

Our Score