full screen background image

திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் தீபாவளி பரிசு..!

திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் தீபாவளி பரிசு..!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்களாம்..!

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் செய்திருக்கும் இந்தச் செயலால் ஆயிரக்கணக்கான உதவி, துணை, இணை இயக்குநர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்களாம்.

tantis-gift

ஒரு சர்ட் பிட், பேண்ட் பிட், ஸ்வீட் பாக்ஸ், தமிழ்த்திரை என்ற சங்கம் பற்றிய புத்தகம், ஒரு பேக் முதலியவைகள் அந்த பரிசு லிஸ்ட்டில் இருக்கின்றனவாம்..

விக்ரமன் தலைமையிலான இந்த அணி பொறுப்பேற்றதில் இருந்தே மிகவும் பொறுப்பாகத்தான் சங்கம் போய்க் கொண்டிருப்பதாக பல இயக்குநர்கள் வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.

இந்த தீபாவளி பரிசை கூட நேரில் வந்து வாங்காதவர்களின் வீடுகளுக்கே கொடுத்து விடுகிறார்களாம். இதிலேயே பாதி பேர் விக்கித்து போய் நிற்கிறார்கள்.. நம்ம சங்கம்தானா இதுவென்று..?

இதைவிட பெரியது.. எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர வேண்டி மருத்துவ அப்ளிகேஷனையும், ஒப்புதல் கடிதத்தையும் கேட்டவர்களுக்கு அவர்கள் வீடு தேடி சென்று தலைவர் விக்ரமனே கொடுத்திருக்கிறாராம்..! மாய்ந்து மாய்ந்து சொல்கிறார்கள் சிலர்..

நடிகர் விஜய் உள்ளிட்ட சிலர் வழங்கிய நன்கொடையினால்தான் இத்தனையும் செய்ய முடிந்ததாக தகவல்..!

நல்லது யார் செய்தாலும் அது அவர்களுக்கு நமது நன்றிகள்..!

Our Score