‘விக்ரம்’ படத்தில் கமலுடன் நடிக்கும் நடிகர் நரேன்..!

‘விக்ரம்’ படத்தில் கமலுடன் நடிக்கும் நடிகர் நரேன்..!

‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடிகர் நரேன் நடிக்கவிருக்கிறார்.

‘விக்ரம்’ படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று முடிந்திருக்கிறது. இயக்குநர் லோகேஷ் முதலில் செய்திருந்த ஸ்கிரிப்ட் கமலுக்குத் திருப்தியில்லாததால் மறுபடியும் ரீ ரைட் செய்யும்படி கேட்டுக் கொள்ள.. அதன்படி திருத்தப்பட்ட ஸ்கிரிப்டை சமீபத்தில் படித்த கமல் திருப்தியாகிவிட்டாராம்.

கடந்த ஆண்டு வெளியான இந்த ‘விக்ரம்’ டீசர் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் ஆகியோர் பவர்ஃபுல்லான வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்போது இதே படத்தில் நடிகர் நரேனும் இணைகிறார் என்பது லேட்டஸ்ட் செய்தி.

இந்தச் செய்தி நரேனுக்குக் கிடைத்ததே ஆச்சரியமான சிச்சுவேஷினில்தானாம். ‘விக்ரம்’ படத்தின் டீஸரைப் பார்த்தவுடன் லோகேஷை அழைத்து பாராட்டினாராம் நரேன். அப்போதுதான் லோகேஷ் “உங்களுக்கும் இந்தப் படத்துல ஒரு ரோல் இருக்கு. அவசியம் நடிக்கணும்” என்றாராம். லோகேஷின் முந்தைய படமான கைதியில் ‘நரேன்’ ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது நினைவில் இருக்கலாம்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க, கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். மிக விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score