சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது..!

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ‘டாக்டர்’ திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாகக் கடைசியாக வந்த உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ‘டாக்டர்’ படத்தை சிவகார்த்திகேயனின் SK Productions நிறுவனமும், தயாரிப்பாளர் கொடப்பாடி J.ராஜேஷ் அவர்களின் K.J.R. Studios நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.   

இப்படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகி பாத்திரத்தில் நடிக்க, வினய் ராய் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, மிலிந்த் சோமன், அருண் அலெக்ஸாண்டர், சுனில் ரெட்டி, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இசை – அனிருத், ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன், படத் தொகுப்பு – R.நிர்மல், உடைகள் வடிவமைப்பு – பல்லவி சிங், கலை இயக்கம் – D.R.K.கிரண். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குநரான நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சென்ற வருடமே வெளியாகியிருக்க வேண்டிய இந்தத் திரைப்படம் கொரோனா லாக் டவுனால் தள்ளித் தள்ளிப் போய் இப்போது தியேட்டருக்கே வர முடியாத சூழலில் மாட்டிக் கொண்டது.

ஓடிடி தளத்திலாவது இதை வெளியிடலாம் என்று ஒரே நேரத்தில் பல்வேறு ஓடிடி தளங்களில் இத்திரைப்படத்தை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். அமேஸான் பிரைம் வீடியோவும், டிஸ்னி ஹாட் ஸ்டாரும் இந்தப் படத்தை வாங்கப் போட்டி போட்ட நிலையில் கடைசியாக டிஸ்னி ஹாட் ஸ்டாருக்கு இந்தப் படம் கிடைத்திருப்பதாக உறுதியானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஆகஸ்ட் மாதம் இத்திரைப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

Our Score