நடிகர் சங்க விவகாரம் குறித்து நடிகர் குமரிமுத்து இன்றைய ‘ஜூனியர் விகடனு’க்கு அளித்திருக்கும் பேட்டி இது :
‘‘பூச்சி முருகன்தான் இந்த விஷயத்தை வெளியே கொண்டுவந்தார். அதற்குப் பிறகுதான், இவர்கள் செய்து வந்த தவறுகள் எல்லாம் வெளியே தெரிந்தது.
இதன் பின்பு நான் ராதாரவி, சரத்குமாருக்கு கடிதம் எழுதினேன். அதில் ‘திருவாளர்கள்’ என்று குறிப்பிட்டதால் என்னை சங்கத்தில் இருந்து நீக்கினர். ‘திருவாளர்’ என்கிற வார்த்தைக்குக்கூட அர்த்தம் தெரியவில்லையா அல்லது எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை நீக்கவேண்டும் என்று செயல்படுகிறார்களா என்பது தெரியவில்லை.
கலைவாணர் பரிசாகக் கொடுத்த நிலத்தை இப்படி தரிசாகப் போட்டு வைத்திருப்பது கஷ்டமாக இருக்கிறது. கண்டிப்பாக நியாயம் ஜெயிக்கும்’’ என்றார்.
நன்றி : ஜூனியர்விகடன் – 24-05-2015